Wasabi & Punisher Max
நண்பர்களே!ரஜினி சார் தந்த ‘ஒப்புதல்’ வாக்குமூலத்தால உங்க எல்லோருக்குமே Wasabi படத்த பத்தி தெரிஞ்சு இருக்கும்னு நம்பறேன்.Wasabi, 2001 இல் வெளி வந்த பிரெஞ்சு படம். கதை என்னன்னா, ஒரு நேர்மையான போலீஸ் ஆபீசர்(Hubert Fiorentini).பயங்கர அடிதடி டைப்.அடிச்சு முடிச்சுட்டு தான் யார் நீன்னு கேக்க கூடிய ஆசாமி.கிரிமினல்சுக்கு சிம்மசொப்பனம்.Arrest பண்ண போனப்ப ஊடால வந்த ஒரே காரணத்துக்காக கமிசனர் பையனையே போட்டு பொரட்டி எடுக்குற ரப் அண்ட் டப் ஆசாமி.ஆனா,கல்லுக்குள் ஈரம் மாதிரி,19 வருசத்துக்கு முன்னாடி தன்ன விட்டு பிரிஞ்சு போன தன்னோட ஜப்பான்கார மனைவிய நெனச்சு இன்னமும் வாழுற நல்லவனும் கூட. ஒரு நாள்,இவருக்கு ஜப்பான்ல இருந்து இவரோட மனைவி இறந்துட்டதாகவும்,அடுத்த நாள் எரியூட்டப் படப்போவதாகவும் தகவல் வருது.போற இடமெல்லாம் அடிதடி,துப்பாக்கிச்சூடுன்னு இவரு பண்ற தொல்ல தாங்காம,இவர என்ன பன்றதுன்னும் தெரியாம முழிச்சு கிட்டு இருந்த போலீஸ் துறை,இது தான்டா சாக்குன்னு இவருக்கு கட்டாய விடுமுறை கொடுத்து ஜப்பானுக்கு அனுப்புறாங்க. ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காதுன்கற மாதிரி,போன உடனே ஏர்போர்ட்ல ஒரு போலீ...