Green Zone - பச்சைவனமும் பாலைவனமும் ....
இல்லாத பேரழிவு ஆயுதங்களைத் தேட நியமிக்கப்பட்டு இருக்கும் அமெரிக்க ராணுவ குழு ஒன்றின் தலைவன் ராய் மில்லர்.தனக்கு கொடுக்கப்படும் தகவல்களை நம்பி,தனது உயிரையும் தனது குழு ஆட்களது உயிரையும் பணயம் வைத்து,ஆயுதங்களை தேடும் வீரன்.தொடர்ச்சியாக தான் செல்லும் இடங்களில் எல்லாம் எந்த ஒரு ஆயுதமும் கிடைக்காமல் போக,தனக்கு கொடுக்கப்படும் தகவல்களை சந்தேகப்படுகிறான். ஆனால்,மேலிடத்தில் தகவல்களின் நம்பகத்தன்மை பற்றி அவன் கேள்வி எழுப்பும் போது, எப்போதும் ஒலிக்கும் அதிகாரத்தின் ஆணவக்குரல் அவனை அடக்க முயல்கிறது.கொடுக்கப்படும் தகவல்களைக் கொண்டு,அவனுக்கு அளிக்கப்படும் வேலைகளை செய்வது மட்டுமே அவனது பணி என்றும்,அதன் ஸ்திரத்தன்மை பற்றிய ஆராய்ச்சி அவனது வேலை இல்லை என்றும் கூறப்படுகிறது. உடனிருக்கும் வீரர்களின் மனோநிலையும்,கொடுத்த வேலையை செய்துவிட்டு சீக்கிரம் உயிரோடு ஊர் போய் சேர வேண்டும் என்பதாக இருக்கும்போது,பல உயிர்களை பணயம் வைத்து,பற்பல சேதங்களுக்கும் அடிகோலிய ஆதார தகவலான பேரழிவு ஆயுதங்களின் இருப்பு குறித்த உண்மையை கண்டறிய வேட்கை கொண்டு அலைகிறான். இந்நிலையில் இவனது மனக்குமுறல்களை நேரில் காணும் CIA ஏஜெ...