Bastille Day
மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு போகும் நேரத்தில் அந்த கைப்பையில் இருந்த வெடிகுண்டு வெடித்து நான்கு பேர் இறக்க, மைக்கல் தான் குண்டு வைத்தவன் என்று காவல்துறையும் உளவுத்துறையும் அவனை தேட ஆரம்பிகிறது. இந்நிலையில்இதே மாதிரி இன்னும் சில வெடிகுண்டுகள் பாரிசின் பாஸ்டில் டே கொண்டாட்டத்தின் போது வெடிக்கும் என்று மிரட்டல் வர, பாரிசில் இருக்கும் சிஐஏ அமெரிக்கனான மைக்கலை முதலில் பிடிக்க சான் ப்ரயரை அனுப்புகிறது. மைக்கலிடம் இருந்து அந்தப் பெண்ணைப் பற்றி தெரிந்து கொள்ளும் சான், மைக்கலின் உதவியோடு அந்தப் பெண்ணை கண்டுபிடித்தாரா, குண்டு வைத்த கும்பலின் நோக்கம் என்ன, அதை ஏன் பஸ்டில் டே கொண்டாட்டத்தில் வைக்க வேண்டும் என்பது மீதிக் கதை. மைகேல் மேசனாக ரிச்சர்ட் மேடன். கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களுக்கு ராப் ஸ்டார்க்காக பரிச்சயம் ஆனவர். சற்றே குறும்புத்தனமும், துடுக்குத்தனமும் நிறைந்த ஒரு கதாப்பாத்திரம். ஆரம்ப காட்சிகளில் நடிக்க கிடைத்த சில சந்தர்ப்பங்களை ...