Posts

Showing posts from February, 2015

Massimo Carlotto–The Dark Horse of Mediterranean Noir….

Image
  நுவார் கதைகளை பற்றி பலர் அறிந்திருக்கலாம். Dashiel Hammett, Raymond Chandler, Michael Cain, James Ellroy என்று பல எழுத்தாளர்கள் முத்திரை பதித்த களம் அது. சமீப காலத்தில் அதற்கு இணையாக (அல்லது வன்முறையில் அதற்கும் மேலான) ஒரு புதிய களமாக Mediterranean Noir உருப்பெற்று வருகிறது. கொலை, கொள்ளை, வஞ்சகம், ஊழல், வன்முறை, சமூகத்தின் மீதான கோபம், cynicism இவற்றின் பண்புகள். இவ்வகையான கதை ஆசிரியர்களில் பிரபலமான ஒருவர் மாசிமோ கார்லோட்டோ. அமெரிக்க நுவார் கதைகள், கிரைம் கதைகள் போல் இல்லாது வன்முறை இவருடைய கதையில் ஒரு சராசரி அங்கம். அதற்கான ஞாயப்படுத்துதல்களோ, காரண காரியமோ, சரித்திரமோ இவருடைய கதையில் இருக்காது. பொளேர் என்று கன்னத்தில் அறைந்து விட்டு 'த்தா என்ன பாக்குற' என்பதே இவருடைய எழுத்து நடை. அமெரிக்க கதைகளை போல 'அவன் சின்ன பையனா இருக்கயில.....' என்பது மாதிரியான எந்தக் கருமமும் இவர் கதைகளில் இருக்காது. இவர் கதைகளில் ஹீரோக்கள் கிடையாது. நல்லவர்கள் அறவே கிடையாது. கதாநாயகர்கள் மேல் இரக்கமோ, பரிதாபமோ, நட்புணர்ச்சியோ சுத்தமாக ஏற்படாது. இவர்களுடைய வாழ்க்கையில் வன்முறை ஒரு சராச