Posts

Showing posts from December, 2014

Feminism and societal dichotomy of sexes....

There was a discussion in the facebook group "Reflections" about the previous post. Here is the link for it. The group is an open group. So you need not be a member to read the comments. I am thinking of writing an article later. But in the meantime, this is just an update. If do write it, I'll remove this post and replace it with the new one. You can post your opinions in the comments below or in the actual discussion in fb. Have fun fellas. https://www.facebook.com/groups/113739122115070/permalink/407007279454918/

The Narcissism Epidemic….

Image
  சில மாதங்களுக்கு முன்னர் “ Reflections ” ஃபேஸ்புக் க்ரூப்பில் ஒரு நீயா நானா வீடியோ பற்றிய விவாதம் நடந்தது. அந்த வீடியோ “நீங்கள் எப்படியெல்லாம் propose செய்யப்பட விரும்புகிறீர்கள்” என்று இளம் பெண்களிடம் கேட்டு அதற்கான அவர்களின் பதில் பற்றியது. அதற்கு வந்த பதில்கள் விசித்திரமானதாக மட்டுமல்லாமல் கவலைக்குரியதாகவும் இருந்தது. பெரும்பாலான பெண்களின் பதில், “சென்னையின் மொட்டை வெயிலில் கோட் சூட் போட்டுக் கொண்டு, ரூஃப் டாப் ரெஸ்டாரன்ட்டில் வைத்து, ஆயிரம் பேருக்கு மத்தியில், பேக்கிரௌண்ட் மியூசிக்குடன், ரோஸ் சாக்கலேட் உடன், முட்டி போட்டு, ப்ரோபோசல் ரிங் கொடுத்து, காதலிப்பாயா என்று கேட்காமல் என்னை கல்யாணம் செய்து கொள்வாயா” என்று கேட்க வேண்டும் என்பதாக இருந்தது. வெட்டியாக இருக்கும் போதெல்லாம் யூட்யூபில் ப்ரோபோசல் வீடியோஸ் பார்த்து கெட்டுப் போன கும்பல் இது என்று எளிதில் புறந்தள்ளி விட முடியாத அளவுக்கு இருத்தது  மிச்சப் பெண்களின் பதில். இந்த அளவுக்கு ரெஸ்டாரன்ட் செட்டிங் கேட்காத பிற பெண்கள் கூட இரண்டு விசயங்களில் ரொம்பவே தெளிவாக இருந்தார்கள். “ஒரு பெரிய கும்பலுக்கு மத்தியில் வைத்து...