Posts

Showing posts from June, 2012

After the wedding - பாசமெனும் தீ…..

Image
  மும்பைப் பெருநகரின் நெடிந்துயர்ந்த கட்டடங்களின் நிழலில், இடிந்து கிடக்கும் கட்டிடங்களுக்கு இடையில் தொலைந்து போன தங்கள் வாழ்கையைத் தேடும் சிறுவர்களுக்கு உதவும் வகையில் அநாதை இல்லம் ஒன்றை நடத்திவருபவன் ஜேகப். ஜேகப்பின் அர்ப்பணிப்பும், உதவும் மனப்பான்மையும் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு சிறியது அவன் நடத்திவரும் அநாதை இல்லத்திற்கு கிடைக்கும் நன்கொடை. சிறுவர்களுக்கு அடுத்த வருடத்திற்குத் தேவையான புத்தகங்கங்களானாலும், அடுத்த மாதத்திற்கான உணவானாலும், எப்போதுமே எதிர்பார்த்தபடி கிடைப்பதில்லை. சூறைக் காற்றில் அலைக்கழிக்கப்படும் சிறு இறகென அவர்களது வாழ்க்கை எப்போதும் தடுமாற்றத்தில் இருந்தாலும், குழந்தைகளுக்கேயுன்டான மகிழ்ச்சியும், ஜேகப் மீதான நம்பிக்கையுமே அவர்களது தடம் புரண்ட வாழ்கையில் தெரியும் சிற்றொளி. வருமானமின்மையின் காரணமாக அநாதை இல்லத்தை இழுத்து மூடும் நிலை அருகாமையில் தெரிந்தாலும் சளைக்காது போராடும் ஜேகப்பிற்கு உரிய நேரத்தில் உதவி செய்ய முன்வருகிறது ஒரு டேனிஷ் நிறுவனம். ஜேகப் நடத்தும் இல்லத்திற்கு பணவுதவி செய்ய முன்வரும் அந்த நிறுவனம், தங்களது நிறுவனத்தின் நிர்வாகி யோர்கன் ஹான்...