The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….
எப்போதாவது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்த ஏதோவொரு முடிவை, இப்போது நினைவு கூர்ந்து, அந்த சமயத்தில் நீங்கள் வேறுவிதமாக முடிவெடுத்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பார்த்ததுண்டா? அந்த புது முடிவு உங்கள் வாழ்கையை எந்த மாதிரியான பாதையில் செலுத்தி இருக்கும் என்று வியந்ததுண்டா ? ஆமாம் என்றால், Welcome! இந்த படமும் அதை பற்றியது தான். உங்களுடைய வாழ்கையின் ஏதோ ஒரு பகுதியை திரும்பி வாழ வழி கிடைத்தால், அதில் நீங்கள் செய்த ஒரு மிகப்பெரிய தவறை சரி செய்ய வழி கிடைத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்படி அந்த தவறு சரி செய்யப்பட்டால், அது உங்கள் வாழ்கையை எப்படியெல்லாம் மாற்றிப் போடும்? இவான், பற்பல நிழல் நினைவுகளுக்கு சொந்தக்காரன். ஏதேனும் மன அழுத்தம் தரக்கூடிய சம்பவம் நிகழ்ந்தால், அந்த சம்பவம் நடந்து முடிந்தபின் அவனால் அந்த சம்பவத்தை நினைவுகூற முடியாது. இவானது தாய் அவனை மருத்துவரிடம் சென்று காண்பித்தாலும், அவனது மூளையில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றும் ஒருவேளை தந்தை இல்லாமல் வாழுவதன் அழுத்தமே காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறிவிடுகிறார். இம்மாதிரி சம்பவங்கள் நடக்கும்ப...