The Poet – கொலைஞன்….
மரணம் குறித்தான உங்கள் எண்ணம் என்ன ? மரணம் குறித்தான உங்கள் பார்வை என்ன வகையானது? அது முடிவு என்றா? ஒரு நீண்ட பயணத்தின் மற்றொரு திருப்பம் என்றா? துன்பமானது என்றா? இந்த உலகத்தின் தொல்லைகளில் இருந்து நிம்மதியளிக்க கூடியது என்றா? எப்போதாவது மரணத்தை ஒருவனுடைய தொழிலாக யோசித்ததுண்டா?சற்று முன்னரே தனது கணவனையோ,தந்தையையோ,தாயையோ,மகனையோ,சொந்தத்தையோ பறிகொடுத்த ஒருவரிடம் “இப்போது நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?” என்று முட்டாள்தனமான கேள்வியைக் கேட்டு அடிபட்டதுண்டா? ஜாக் மெக்எவோய் ஒரு பத்திரிக்கையாளன். மரணம் குறித்த, குறிப்பாக கொலைகள் குறித்த செய்திகளை எழுதும் ஒரு பத்திரிக்கையாளன். மரணம் அவனது வாழ்வில் ஒரு அங்கம் மட்டுமல்ல, அதுவே அவனது தொழில் முறை வாழ்க்கையும் கூட. ஒருவரது மரணமே அவனுக்கு உணவளிக்கும் வேலை. மரணத்திற்கு அவனுக்குமான உறவு, ஒரு குயவனுக்கும் அவன் குடையும் பானைக்குமானது. கரடுமுரடான மண்ணை எடுத்து அதை குழைத்துக் குழைத்து அவன் பானையாக உருவாக்குவதைப் போலவே, கொடூரமான மரணங்களை எடுத்து அதை குழைத்து படிப்பவர்களின் ஆர்வத்தை தூண்டுமாறு தருவதே அவன் பணி. தினசரி பிறரது மரணத்தை தேடி ஓடும...