Pet sematary - புதை நிலம்….
வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் திருப்பங்கள் எத்தகைய பாதைகளில் நம்மை கொண்டு சேர்க்கும் என்பது அறிந்து கொள்ள முடியாத ஒன்று.சிகாகோ பெருநகரத்தில் இருந்து அமைதியையும்,இயற்கையின் அரவணைப்பையும் வேண்டி சிறு நகரமான லுட்லோவிற்கு வந்து குடியேறும் டாக்டர் லூயிஸ் க்ரீட், தந்தைப் பாசம் அறியாத தனக்கு எப்படி தந்தையை போன்ற ஒருவரின் (ஜட் கிரண்டெல் ) பாச அரவணைப்பு கிடைக்கும் என்று எதிர்பாதிருக்கவில்லையோ,அதைப்போலவே நடக்கப் போகும் விபரீதங்களையும் அறிந்திருக்கவில்லை. லூயிஸின் மகிழ்ச்சிக்கு காரணமாய் இருக்கும் ஜட், ‘தூண்டபட்டோ, தூண்டப்படாமலோ’ அவனுக்கு நிகழவிருக்கும் விபரீதங்களுக்கும் காரணமாய் அமைகிறார்.ஒரு நாள்,லூயிஸ் மற்றும் அவனது குடும்பத்தை அவர்களது வீட்டின் அருகே உள்ள மலையொன்றுக்கு அழைத்துச் செல்லும் ஜட்,அங்கே சிறுவர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை புதைக்கும் புதை நிலமொன்றை காட்டுகிறார்.பல தலைமுறைகளாக அந்த சிறுநகரத்தின் குழந்தைகள் தங்கள் பாசமிகுந்த செல்லப் பிராணிகளை புதைக்க உபயோகப்படுத்தும் அந்த நிலம்,வெறும் சடலங்களை மட்டுமில்லாது வேறு சில மர்மமான விசயங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. ஜட்டின் ...