XIII - தேடலே வாழ்கையாய்….
மனிதனின் வாழ்க்கையில் விரவி இருப்பது தேடலே! ஆனால் தேடலே வாழ்கையாய் இருந்தால்...? வாழ்கையை தொலைத்தவன் கடந்த காலத்தின் சுக நினைவுகளில் தஞ்சம் அடைந்து இன்புறலாம்!ஆனால் கடந்த காலத்தையே தொலைத்தவனது கதி? புரட்டி எடுக்கும் கடலில் பற்றிக் கொள்ளக் கிடைத்த பலகையை தவற விட்டவனது மன நிலை எப்படி இருக்கும்? சுடும் பாலைவனத்திலுள்ள ஒரே சோலைவனத்தின் பாதையை தொலைத்தவனது நிலைக்கும்,நினைவை தொலைத்தவனது நிலைக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. கண்ணைப் பறிக்கும் ஓவியத்தோடு,ஆரம்பக்கட்டமே நம்மைக் கவர்கிறது.ஒதுக்குப்புறமான ஒரு கடற்கரையில்,ஆர்ப்பரிக்கும் கடலுக்கும்,துள்ளிப் பறக்கும் பறவைகளுக்கும் நேர் மாறாக அமைதியாய் உள்ள ஒரு வீட்டின் அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு முதியவரை அவரது நாய் வற்புறுத்தி இழுத்துச் செல்கிறது.அந்த நாய் வழிநடத்தி செல்ல, தொடர்வது முதியவர் அபே மட்டுமல்ல, காலனும்! சலனமே உருவாய் ஆர்ப்பரிக்கும் கடல் அலையின் அருகிலேயே சலனமே இல்லாமல் கிடக்கிறது ஒரு உடல்.மனைவியின் உதவியோடு,அவனை வீட்டிற்கு தூக்கிச் செல்லும் முதியவர் அபே, அவனுக்கு சிகிச்சை செய்ய முன்னாள் டாக்டரும் இ...