She’s Out Of My League - பொருந்தாக் காதல்…
எப்போதாவது ஒரு படத்தை எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்து,அது எதிர்பார்த்ததை விட நன்றாக இருந்திருக்கிறதா?அப்பேர்ப்பட்ட படம் தான் இந்த She’s Out of My League.... கதை என்னன்னா,well, the title says it all ! அதாவது,ஒரு சுமாரான இளைஞன்,ஒரு மிக அழகான பெண்... இந்த இருவருக்கும் இடையில தற்செயலா ஏற்படும் காதல்,மோதல்,பிரிவு,ஒன்று சேருதல்... அவ்ளோ தான்.அட,அமெரிக்க காதல் படங்கள்ல வேற என்ன பெருசா எதிர்பார்க்க முடியும்? ;) கிர்க் (Kirk Kettner) Pittsburg இல் வாழும், அங்கே உள்ள ஏர்போர்ட்டில் செக்யூரிட்டி ஆபீசராக பணிபுரியும்,inferiority complex கொண்ட, மகா ஈகோ பிடித்த self centred ஆன தன்னுடைய முன்னாள் காதலியை திரும்ப பெற துடிக்கும் (அவ்ளோ பிடிக்கும்னு இல்ல,அவனுக்கு வேற எதுவும் மடியாததால..),ஒரு மிகச் சுமாரான இளைஞன்.அவனது நண்பர்களின் கணக்குப்படி அவனுக்கு ஒரு 5 மார்க் தரலாம். ஒருநாள் தற்செயலா மோலி(Molly McCleish) அப்டிங்கற ஒரு பொண்ணை ஏர்போர்ட்ல சந்திக்கிறான்.அவளோட ஐ போன ஏர்போர்ட் செக்யூரிட்டி ஏரியால மறந்து வச்சுட்டுப் போய்ட,அந்த ஐ போனை எடுத்துக் கொண்டு ப...