கடல் புறா 2 – கடல் அலையோ, கல் மலையோ….
தழுவி நழுவும் கடல் அலையோ தூரத் தெரியும் கல் மலையோ? அக்ஷயமுனைக்கு வர இஷ்டப்படாதவன் போல மேகத்தின் ஊடே ஒளிந்திருந்த சூரியன், அக்ஷயமுனையின் கரைகளை வேண்டியே நெருங்கும் கப்பலை கவனித்துக் கொண்டிருந்தான். வந்தால் விளையப் போகும் நிகழ்வுகளை விளக்கும் எண்ணத்திலோ என்னவோ செங்கதிர்களை அந்தக் கப்பலின் மீது நின்று கொண்டிருந்த உருவத்தின் மீதும் பாய்ச்சினான். தளத்தில் நின்று கொண்டிருந்த இளையபல்லவனது விழிகள் கரையை விழுங்கி விடும் கழுகுப் பார்வையை வீசிக் கொண்டிருந்தன. தூரத் தெரியும் தூங்கும் எரிமலையான பகிட் பாரிசானின் உக்கிரமோ, விலகி ஓட நினைப்பன போல பறந்து செல்லும் பறவைகளோ அவன் பார்வையில் இருந்து தப்பவில்லை. அப்பிராந்தியத்திலேயே பயங்கரமான இடம் என அக்ஷயமுனை பெயர் பெற்றிருந்ததென்றால் அதற்கு காரணம் இருக்கவே செய்தது. நிலைமை எப்போதும் வெடிக்கத் தயாராயிருக்கும் பகிட் பாரிசனுக்கு ஒப்பானதே என்பது மட்டுமல்லாது, நர மாமிசம் தின்னும் பூர்வ குடிகளையும், கொ