கடல் புறா I - அஞ்சன விழிகளின் அமுத மொழியில்...
“காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த களப் போர் பாடத் திறமினோ ” -கலிங்கத்துப்பரணி. பொருள்: காஞ்சி நகரம் இருக்க, கலிங்கம் அழிய நடந்த களப் போர் குறித்து பாட.. மறைபொருள்: ஆபரணம் இருக்க, ஆடை குலைய நிகழ்ந்த போர்.. காஞ்சி- மங்கையர் ஆபரணம்; கலிங்கம்- ஆடை. தமிழ்நாட்டுக்கும், கலிங்க நாட்டுக்குமான பரஸ்பர வெறுப்பை தற்காலிகமாகவாது நிறுத்த விளையும் ஆசையில் சோழ மன்னன் கொடுத்தனுப்பிய சமாதான ஓலையுடன் பாலூர்ப் பெருந்துறைக்கு வந்து சேரும் கருணாகரன், வந்தவுடன் தன்னுடைய தோழனும், வேங்கி நாட்டு இளவரசனுமான அநபாய சோழன் (பிற்கால குலோத்துங்க சோழ மன்னன்) சிறை பிடிக்கப்பட்ட செய்தியைக் கேட்டு வெகுண்டெழுகிறான். அது மட்டுமல்லாமல், தமிழர்கள் சமீப காலத்தில் காரணமில்லாமல் சிறை பிடிக்கப்படுவதையும் அறிகிறான். உணர்ச்சி வேகத்தில் விழும் வார்த்தைகளை விட வேகமாக சண்டையில் சிக்கும் அவனைக் காவலர் துரத்த, த...