Sunday, October 24, 2010

Godfather – Powerplays….

1.Godfather-Novel-Cover 

தன்னுடைய மகளை மரண காயப்படுத்தியது மட்டுமல்லாது,அவளது முகத்தையும் சிதைத்த இரு இளைஞர்கள் ,அதிகாரம் படைத்தவர்களின் பிள்ளைகள் என்பதற்காகவே சிறிய தண்டனையோடு விடுவிக்கப்பட்டு, தன்னை ஆணவத்தோடு நோக்கி புன்னகைத்துவிட்டுச் செல்லும் போது, ”இங்கே நமக்கு நியாயம் கிடைக்காது.நியாயம் வேண்டுமானால் நாம் டானிடம் தான் செல்ல வேண்டும்.” என்கிறார் அமெரிகோ (Amerigo Bonasera).

பன்னிரண்டு வயதே ஆன விடோவிடம்(Vito), “நீ ஒரு நாட்டையே ஆட்டிப் படைக்கும் சக்தி கொண்ட மனிதனாவாய்.” என்று எவராவது சொல்லி இருந்தால்,கண்டிப்பாக நம்பி இருக்க மாட்டான்.சிசிலியில்,தனது தந்தைக்கு உதவியாக வயலில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த சிறுவனிடம் இத்தகைய பெரிய வார்த்தைகளை சொன்னால் நம்ப மாட்டான் தான்.ஆனால்,வாழ்க்கை விசித்திரமானது அல்லவா?

உள்ளூர் மாபியாவுடனான சண்டையில் தனது தந்தை கொல்லப்பட்டதும்,தனது உயிருக்கு குறிவைக்கப்பட்டதும் சேர்ந்து அவனை அமெரிக்கா நோக்கித் துரத்துகின்றன.அமெரிக்கா ஒரு எளிய விவசாயியின் மகனை முகம்மலர வரவேற்கவில்லை.மாறாக,அமெரிக்காவில் ஒண்டி இருக்கும் இத்தாலியர்களே அவனுக்கு ஆதரவு அளிக்கிறார்கள்.சட்டத்திற்கு பணிந்தே நடக்கும் விடோவைப் பார்த்து விதி சிரிக்கிறது.க்ளேமன்ஸா என்னும் உள்ளூர் போக்கிரியின் துணை கொண்டு விடோவை தன் வசம் இழுக்கிறது.வேலையின்மையால் பசியில் வாடும் தன் குடும்பத்தை காக்க சிறு திருட்டுக்களில் இறங்கும் விடோ,பின்னாளில் மாபெரும் சக்தியாக உருவெடுக்கிறான்.அடுத்தவரின் சட்டதிட்டங்களை ஏற்று நடக்கும் மந்தைக் கூட்டத்தில் ஒருவனாக தனக்கு விருப்பமில்லை என்று ஒரு நாள் உணரும் விடோ,தனது சொந்த சட்டங்களை உருவாக்குகிறான்.தனது சொந்த உலகத்தையும் உருவாக்குகிறான்.ஆனால்,டானின் உலகம் மாறுபட்டது.வெறிகொண்ட மிருங்கங்களை கொண்ட உலகமல்ல அது!புத்திசாலிகளையும்,திறமைசாலிகளையும் தன்னகத்தே கொண்டு உருவாக்கப்பட்டதொரு கோட்டை அது.அந்த கோட்டை உருவத்தில் சிறிதே எனினும்,வலிமையில் பெரிது.

டான் (Don Corleone) என்றும் Godfather (காட்பாதர்) என்றும் பயத்துடனும், மரியாதையுடனும் அழைக்கப் படுவதற்கு காரணம் இருக்கவே செய்கிறது.Luca Brazi(லூகா) போன்ற கொலை வெறியர்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும்,நண்பன் என்று வந்து விட்டால் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து உதவும் மனம் கொண்டவர் தான் டான்.சட்டம் சரியான நியாயம் வழங்காத போது,நியாயத்தை வலிந்து பெற்றுத் தருபவர் அவரே.அதற்க்கு சன்மானமாக அவர் எதிர்ப்பார்ப்பது பணமல்ல.பாதிக்கப்பட்டவரின் நட்பு....

டானுக்கு அவர் தரக் கூடிய மரியாதை...

இதையெல்லாம் விட, எந்த நண்பனும் சக நண்பனிடம் எதிர்பார்க்கும், தக்க சமயத்தில் பதில் உதவி செய்வேன் என்ற வாக்குறுதி.

ஆனால்,ஒரு உண்மையை நாம் மறந்து விடலாகாது.சுற்றியும் பனி விரிந்து கிடக்கும் ஆர்டிக் கண்டத்தில் பயணம் செல்பவன்,அங்கங்கே,தனக்கு வரும் வழியிலோ,பின்னரோ,வழி மாறினாலோ உபயோகப்படட்டும் என்று உணவுப் பொட்டலங்களை தூவி செல்வது போலே தான் வாழ்க்கைப் பாதையில் பயணிக்கும் டானும்.(இது நாவலில் இருந்தே எடுத்து கையாளப்பட்டு இருக்கிறது.மரியோவின் எழுத்தாள்மையை சொல்ல இதுவே போதும்).

வாழ்க்கையில் குறைகள் அதிகமில்லாத மனிதானக இருக்கும் விடோ,குழந்தைகள் விசயத்தில் மனக்குறை கொண்டிருக்கிறார்.

முதல் மகனான சன்னி (Sonny),நல்ல இதயத்தைக் கொண்டவனாய் இருந்தாலும், புத்திசாலித்தனதுக்கு பதில் கோபத்தைக் கொண்டவனாய் இருக்கிறான்.எதையும் ஆராய்ந்து முடிவெடுக்காமல் கோப வெறியில் அவசர முடிவெடுக்கும் ஆத்திரக்காரன் இவன்.A man who puts his brawn before his brain.

இரண்டாவது மகனான ப்ரெட்டி (Freddie), தந்தையின் வார்த்தையை வழிபற்றி நடப்பவனாய் இருந்தாலும்,சொந்த எண்ணவோட்டம் இல்லாதவனாக இருக்கிறான்.

மூன்றாவது மகனான மைகேல்(Michael),தந்தைக்கு இணையான மகா கூர்மயுடைய புத்தியைக் கொண்டிருந்தாலும்,தனது வாழ்கையை தானே வகுத்துக்கொள்ள விழைகிறான்.தந்தையின் செயல்களில் ஈடுபட ஆரம்பத்தில் இருந்தே விருப்பம் காட்டாத மைக்,தனது வாழ்கை, தன்னைத் தவிர வேறு யாராலும் மாற்றப் படக்கூடாது என்ற வைராக்கியத்தோடு இருக்கிறான்,அவனது தந்தையைப் போலவே...

தனக்குப் பின்னான தனது சாம்ராஜ்ஜியத்தை பற்றி கவலை கொள்ளும் டானின் கவலையை அதிகரிக்கவே வருகிறான் Sollozzo(சொலோசோ).போதைப் பொருள் கடத்தலில்,அதிகார பலம் பொருந்திய விடோவின் உதவியை நாடி வரும் அவன்,விடோவின் அரசியல் தொடர்புகளின் மூலம் அமெரிக்காவினுள் வெகு சுலபமாக போதைப் பொருட்களை விற்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறான்.ஆனால்,விடோ அவ்வாறு எண்ணவில்லை.போதை மருந்து கடத்தலை வெறுக்கும் அவர் மறுக்கிறார்.இது கிழ சிங்கத்துக்கும்,தந்திரமான ஓநாய்க்கும் இடையே யுத்தத்தை தூண்டி விடுகிறது.

விடோ சுடப்படுகிறார்.சந்தர்ப்ப சூழ்நிலையால் முன்கோபக்கார சன்னி பொறுப்பேற்கிறான்.ஆனால்,சொலோசோவின் குறி விடோ மட்டுமல்ல!பின்னால் ஏற்படப் போகும் ரத்தக்களரியை அறியாத அவன்,நியூ யார்க் நகரின் பிற மாபியா குடும்பங்களின் உதவியோடு ரத்தக் கம்பளத்தை விரிக்க,அது ரத்த ஆறாக மாறும் வாய்ப்பை பெறுகிறது.நடந்தது என்ன?விடோ உயிர் பிழைத்தாரா?ப்ரெட்டி, மைக் என்ன ஆனார்கள்? முன்கோபக்கார சன்னியால் விளைந்தது என்ன? என்பதற்கு பர பரப்போடும் எழுத்தாளுமையோடும் விவரிக்கிறது காட்பாதர் புத்தகம்.

ஒரு சுயதொழில் பத்திரிக்கையாளனாக(freelancer) இருந்த காலத்தில் மரியோ ப்யூசோவின் வருத்தம், குறைந்த சம்பளத்தைப் பற்றியோ,சுகத்தைப் பற்றியோ இருக்கவில்லை.தான் எழுதிய இரு நாவல்கள் விமர்சகர்களின் நல்மதிப்பை சம்பாதித்தாலும்,ரசிகர்களையும் பணத்தையும் சம்பாதிக்காதது குறித்ததானது அவர் வருத்தம்.வருத்தம் கோபமாக மாறுகிறது.ஒரு Bestseller நாவல் எழுதுவேன் என்று சூளுரைத்த மரியோ, எழுதியது தான் The Godfather.இன்றளவிலும் மாபியா என்றால் நினைவுக்கு வரும் பெயர்.இதன் மூலக்கதையை சுட்டு படம் எடுத்தவர் அனேகம்.

பரபர எழுத்து இரு வகைப்படும்.டமால்,டுமீல் என்று வெறும் சத்தத்தால் நிரப்புவது முதல் வகை.தன் எழுத்தினால் ரசிகனை கதைக்குள் இழுத்து,சம்பவங்களின் மூலமும்,புத்திசாலித்தனமான கதையின் மூலமும்,அருமையான காதாபாத்திரங்களின் மூலமும் கவர்ந்து பரபரப்பை ஏற்படுத்துவது ரெண்டாவது வகை.மரியோ எந்த வகை என்பதை சொல்லத் தேவை இல்லை.தற்சமயத்தில் நான் படித்த ஒரு அற்புதமான எழுத்திற்கு சொந்தக்காரர் மரியோ.தீர்க்கமான,தேவை இல்லாத விவரணைகள் இல்லாத ஒரு எழுத்து இவருடையது.In short,a no nonsense writing.

பல காலமாக(சுமார் மூன்று வருடங்கள்) படிக்க ஆசைப்பட்டு ஒத்திப் போட்டு வந்த புத்தகம் இது.மரியோ பழைய எழுத்தாளர் ஆயிற்றே,அவர் நடை மெதுவாக இருக்குமோ என்ற எண்ணமே காரணம்.ஆனால்,இனி அவர் புத்தகங்கள் அனைத்தையும் வாங்கும் எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.I’ll have to accept that old is indeed gold!

இனி மேல் காட்பாதர் படம் பார்த்தாலும் இந்த புத்தகம் தந்த நெருக்கமும்,under the skin view வும் நிச்சயம் கிடைக்காது.(என்னது,புத்தகம் படித்துவிட்டு பின் தான் படம் பார்பீரா என்பவர் இங்கே புதிது என எளிதாக தெரிந்து கொள்ளலாம் :) ).

 

Godfather – Mind blowing…(No gangster terms and no pun intended,of course… ;) )

Saturday, October 16, 2010

Invictus -ஆட்கொள்ளப்பட்ட தேசத்தின் ஆட்கொள்ளப்படாத ஆன்மா…

 Invictus

 

2009 இல் வெளிவந்த இந்தப் படம்,இரு மனிதர்களின் போராட்டத்தைப் பற்றியது.The struggle of two men, to uplift a beaten up nation by uplifting a beaten up sports team.இது தான் கதை.

Invictus[2009]DvDrip[Eng]-FXG.avi_snapshot_00.02.04_[2010.09.22_21.52.30] 1990 வருடம் நெல்சன் மண்டேலா தன்னுடைய நீண்ட சிறைத் தண்டனையில் இருந்து விடுவிக்கப்படுவதை காட்டி ஆரம்பிக்கறது படம்.அவரை விடுவித்துச் செல்லுவதை பார்க்கும் ஆப்ரிக்க சிறுவர்கள் குதூகலப்படும் அதே நேரம்,ஒரு வெள்ளையன் இன்னொருவனிடம், “நம் நாடு நாய்களுக்கு போகும் காலம் இது!(This is the day our country(??) goes to the dogs)“ என்கிறான்.

எங்கே இவர் நிலைமையை சீர் செய்து விடுவாரோ என்று பயப்படும் ஆங்கில அரசாங்கம்,தீவிரவாத கும்பல்களுக்கு மறைமுகமாக ஆயுதம் கொடுத்து நாட்டில் வன்முறையை கட்டவிழ்த்து நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.உள்நாட்டு யுத்தம் நடக்கக் கூடிய நிலையில் உள்ள நாட்டை கஷ்டப்பட்டு மீட்டு, ஆப்ரிக்க மக்களுக்கும் வோட்டுரிமை பெற்றுத் தருகிறார் மண்டேலா.மேலும்,நிகழும் தேர்தலில் ஜெயிக்கிறார் மண்டேலா.

நிறவெறி பிடித்த வெள்ளையனின் கூற்றுக்கு மாறாக,காரியங்கள் நடைபெற ஆரம்பிக்கிறது மண்டேலா ஆட்சியில்.ஆப்ரிக்க மக்களின் பிரதிநிதியாக மண்டேலா பிரெசிடென்டாக தேர்ந்தெடுக்கப்பட்டதும்,அவரது அலுவலகத்தில் இருந்து விலக எத்தனிக்கிறார்கள் அங்கே ஏற்கனவே வேலை செய்யும் வெள்ளையர்கள்.இது எங்கே நாம் போட்ட வெறியாட்டம் நமக்கே திரும்பிப் படிக்கப்படுமோ என்ற பயத்தின் வெளிப்பாடே! ஆனால்,குணத்தில் பெரியவர் யார் என்று காட்டுகிறார் மண்டேலா.

Invictus[2009]DvDrip[Eng]-FXG.avi_snapshot_00.10.16_[2010.09.22_22.12.29] அலுவலகத்தை விட்டுப்போக எத்தனிக்கும் வெள்ளையர்களிடம், ”உங்களுக்கு போக ஆசை இருந்தால் நீங்கள் போகலாம்.ஆனால்,உங்கள் நிறத்தின் காரணமாக நீங்கள் போக நினைத்து இருந்தால்,அதனை நிறுத்திவிட்டு, நிறவெறி இல்லாத ஒற்றுமை உள்ள நாடாக ஆப்ரிக்காவை உருவாக்க உதவுங்கள்.ஆப்ரிக்க நாட்டின் குடிமக்கள் தான் நீங்களும்.” என்கிறார். பழிவாங்கத் துடிக்கும் மக்களை சமாதானப்படுத்த முனைகிறார்.மாற்றத்தை தன் மூலமே ஆரம்பிக்கிறார்.தன்னுடைய மெய்க்காப்பாளர் படையில் இரு நிற மக்களையும் வேலைக்கு அமர்த்துகிறார்.ஏற்கனவே பசி,கொள்ளை,கொலை,நிறவெறி ஆகியவற்றால் அல்லல்படும் நாட்டில் பழிவாங்கும் வெறி தலை தூக்கி விடாமல் இருக்க பாடுபடுகிறார்.

இது இப்படியாக போய்க்கொண்டு இருக்கும் போது,ஒருநாள் ஆப்ரிக்க ரக்பி அணியினர் பங்கேற்கும் ஒரு போட்டிக்கு செல்கிறார்.Springboks என்றும், செல்லமாக bokke என்றும் அழைக்கப்படும் இந்த  ரக்பி  அணியினை ஆப்ரிக்க மக்கள் நிறவெறித் தனத்தின் அடையாளமாகவே பார்கிறார்கள்.இதன் காரணமாக,எப்போது இந்த அணி விளையாண்டலும்,இவர்களின் எதிர் அணிக்கே உற்சாகம் கொடுப்பது ஆப்ரிக்க மக்களின் வழக்கம்.

Invictus[2009]DvDrip[Eng]-FXG.avi_snapshot_00.55.47_[2010.09.22_22.26.08] சிறு வயதில் தானும் இதையே செய்து இருந்தாலும், ஒன்றிய ஆப்ரிக்காவுக்கு இது பெரும் ஆபத்து என உணரும் மண்டேலா,மக்களிடம் இருக்கும் இந்த துவேசத்தை நீக்க யோசிக்கிறார். மக்களின் நிற துவேசத்தை நீக்க தான் எடுக்கும் முயற்சிகளில் போக்கே அணியினரை மக்களை ஏற்க வைப்பதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று உணர்கிறார். மக்களை இணைக்க விளையாட்டை பயன்படுத்த நினைக்கிறார்.மிக மோசமான நிலையில் இருக்கும் ரக்பி அணியின் கேப்டன் Francois Piennar ஐ அழைத்து, அடுத்த வருடத்தில் நடக்க இருக்கும் ரக்பி உலகக்கோப்பை போட்டியை ஜெயிக்க வேண்டும் என்று மறைமுகமாக உணர்த்துகிறார்.ஒற்றுமையின் முதல் படி,விளையாட்டின் மூலம் ஆரம்பிக்கப்பட முயற்சிக்கிறார்.ஆனால் இந்த முடிவு சந்தேகங்களையும்,எதிர்ப்புகளையும் எழுப்பும் அளவு,ஆதரவை பெற்றுத் தருவதாயில்லை.

 Invictus[2009]DvDrip[Eng]-FXG.avi_snapshot_00.46.02_[2010.09.22_22.43.17] ஆனால் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கும் மண்டேலா,தன்னைப் போலவே ஒற்றுமையை விரும்பும் ப்ரான்ஸ்வாவின் உதவியுடன் செயல்படுகிறார். ஆனால் அவர்களது பாதை எளிதானது அல்ல!மிக மோசமான நிலையில் உள்ள அணி,மோசமான நிலையில் உள்ள நாடு இரண்டையும் அவர்கள் சீர்படுத்த வேண்டும்.மிகப்பெரும் சவால்களை விளையாட்டிலும்,நாட்டிலும் சந்திக்க வேண்டும்.எப்படி அதை சாதித்தார்கள் என்பதே கதை.

யூகிக்கக் கூடிய கதையைக் கொண்டிருந்தாலும்,கதை செல்லும் வேகம் பிரமிக்க வைக்கும்.அது மட்டுமில்லாமல்,ஆப்ரிக்க நாட்டின் மிகச் சிக்கலான பிரச்சனையைக் கூட சின்னச் சின்ன காட்சிகளால் எளிதாக உணர்த்த முடிகிறது Clint Eastwood க்கு.

படத்தின் ஆரம்ப காட்சியில், வெள்ளையர்கள் uniform அணிந்து பச்சைப் புல்வெளியில் விளையாடிக் கொண்டு இருக்க,எதிரே புழுதியில் கிழிந்த சட்டையுடன் விளையாடும் ஆப்ரிக்க மண்ணின் மைந்தர்களும்,அந்த இரு அணியினரின் பின்னால் தெரியும் கட்டடங்களும்,இந்த இருவேறு துருவங்களையும் இணைக்கும் பாதையில் செல்லும் மண்டேலா, ஒரு நல்ல உதாரணம்.

Invictus[2009]DvDrip[Eng]-FXG.avi_snapshot_00.01.48_[2010.09.22_21.52.52]

Invictus[2009]DvDrip[Eng]-FXG.avi_snapshot_00.01.45_[2010.09.22_21.52.49]

 

கதையில் சினிமா நகாசு இல்லாமல்,கதையை உண்மையான சம்பவங்களின் மூலமாக வைத்து எடுத்திருப்பது இன்னும் அழகு.எங்கேயும் ஆங்கில சினிமாவின் இலக்கணமான அதிகப்படி விவரனைகளோ,காட்சிகளோ இல்லாததும் சிறப்பு.

மண்டேலாவாக Morgan Freeman. நடிப்பு ராட்சசன் !

Usually,Morgan steals the whole show even if you give him just 10 mins.What if you give him an entire movie?

Invictus[2009]DvDrip[Eng]-FXG.avi_snapshot_02.06.31_[2010.09.22_22.57.51] அது தான் இங்க நடந்து இருக்கிறது.வசன உச்சரிப்பு,நடை,செய்கைகள் என அனைத்திலும்  மண்டேலா தான் தெரிகிறார்.மோர்கன் தெரியவேயில்லை. மண்டேலாவின் முகமே குழம்ப ஆரம்பித்து எனக்கு.பாத்திரத்தோடு இணைந்த பிரமாண்ட நடிப்பைத் தருகிறார் இந்த மகா நடிகன்!இனி எனக்கு மண்டேலா என்றால் இவர் முகமும் நினைவுக்கு வரும்.

“உங்கள் குடும்பம் எவ்வாறு இருக்கிறது? “ எனக் கேட்கப்படும் கேள்விக்கு, “என் குடும்பம் மிகப்பெரியது.43 மில்லியன் மக்களைக் கொண்டது.” என்று சொல்லி விட்டு,பிரித்து கிடக்கும் தன் குடும்பத்தை எண்ணியவாறே,ஆப்ரிக்காவையும் நினைத்துக் கவலைப்படும் கட்டத்தில் மோர்கனின் நடிப்பு,ஒரு பானைக்கு ஒரு சோறு பதம்.

ப்ரான்ஸ்வா ஆக Matt Damon. மோசமான நிலையில் பயிற்சி இல்லாத அணியினை பக்குவப்படுத்தி அதனை வெற்றிக்கு கொண்டு செல்ல முனைவது மட்டுமல்லாது,மண்டேலாவின் திட்டங்களுக்கு துணையாய் இருந்து நாட்டையும் வசீகரப்படுத்தும் வேடம். நன்றாக செய்து இருக்கிறார் என்றாலும்,அவருக்கு இதில் நடிக்க வாய்ப்பு கம்மி தான். மலையென திகழும் மோர்கன் முன் முடங்கிப் போகிறார் மேட்.

Invictus[2009]DvDrip[Eng]-FXG.avi_snapshot_00.12.42_[2010.09.22_22.13.19] ஆப்ரிக்க மக்களுக்கும் வெள்ளையர்களுக்கும் உள்ள வெறுப்பு மண்டேலாவின் பாதுகாப்பு அதிகாரிகளின் மூலமே வெளிப்படுகிறது.கதம்பக்கூட்டமான இது,அடுத்தவரை வெறுப்புடனே நோக்குவதும்,சண்டை போடுவதும்,பின்னர் சிறுது சிறிதாக நட்பு கொள்வதும்,கடைசியில் ஒன்றாக சேர்ந்து கொண்டாடுவதும் என்று மாற்றத்தை இந்தக் கூட்டத்தின் மூலமே வெளிப்படுத்துவது சிறப்பு.

இது மட்டுமில்லாது,போக்கே அணியின் வெற்றியின் மூலம் உற்சாகம் அடையும் மக்கள் அதனை நேசிக்க ஆரம்பிப்பதும்,ஒற்றுமையின் முதல் படி விரிவதும்,பின்னர் போக்கே அணியை நிறபேதமில்லாமல் ஆதரிப்பதும்,கடைசியில் எல்லோரும் சேர்ந்து ஆடிப் பாடுவதும் என்று, ஒற்றுமையை பேண சிறந்த வழிகளில் ஒன்று விளையாட்டு என்பது கண் முன் விரிகிறது.

சிறையில் இருந்து வந்ததும் வன்முறையை அடக்குவது,பொதுத் தேர்தலை கொண்டுவருவது, மக்களை ஒன்றுபடுத்த பாடுபடுவது, வெள்ளையர்களை பழிவாங்க எத்தனிக்காமல் மேன்மை காட்டுவது,தன் சம்பளம் மிக அதிகம் எனக்கூறி மூன்றில் ஒரு பங்கை தானத்துக்கு கொடுப்பது,போட்டியின் முதல் நாள் நேரே சென்று வாழ்த்துக் கூறுவது என்று நாம் பார்ப்பது, ஒரு மஹா மனிதனின் வாழ்க்கையில் சிறியதொரு பங்கே!ஆனால்,இதுவே நம்மை மலைக்கவும் ஏங்கவும் வைக்கிறது.இவரையும்,நமது நாட்டில் இருக்கும் சில ஈனப் பிறவிகளையும் ஒப்பீடு செய்து, கோபப்படாமல் இருக்க முடியவில்லை.தன் புகழ் கெட்டாலும் நாட்டு ஒற்றுமையை நிலைநாட்ட முடிவுகள் எடுத்த மண்டேலா எங்கே?தினம் தினம் பாராட்டு விழா நடத்திக் கொள்ளும் சில மனிதர்கள் எங்கே?

மேலும்,பணியின் முதல் நாள் காலை,மண்டேலா வாக்கிங் போகும்போது பேப்பர் ஒன்றின் தலையங்கம் Invictus[2009]DvDrip[Eng]-FXG.avi_snapshot_00.06.47_[2010.09.22_22.12.00] தென்படுகிறது.அதில்,” தேர்தலில் ஜெயிக்க முடிந்த மண்டேலாவுக்கு,நாட்டை வழிநடத்த முடியுமா?” என்ற வாசகம் இருக்க,கூட இருக்கும் மெய்க்காப்பாளர், 

Not even one day on the job and they are after you.

என்பார்.அதற்கு மண்டேலா,It's  just a legitimate question. என்று சொல்லும் போது ஆரம்பிக்கிறது இந்த மாமனிதனின் ராஜாங்கம்.

இங்கே INVICTUS என்பது ஒரு லத்தின் வார்த்தை.அதற்கு Undefeatable ,Unconquerable என்று அர்த்தம்.

4261296387 இருபத்தியேழு வருடங்கள் சிறையில் இருந்தாலும்,தன்னை அங்கே வைத்து கொடுமைப்படுத்திய வெள்ளையர்களை தன் நாட்டின் குடிமக்களாக ஏற்று,ஒற்றுமைக்கு போராடிய ஒரு மனிதனை குறிக்க இதை விட சிறந்த வார்த்தை இருக்காது.

இதே பெயரைக் கொண்ட ஒரு பாடலும் படத்தில் அடிக்கடி வரும்.தான் ஒவ்வொரு முறை சோர்ந்து போகும் போதும்,தனக்கு அந்தப் பாடல் தான் மேலே செல்ல உற்சாகம் தரும் என்பது மண்டேலாவே சொல்லியது.அந்தப் பாடல் இங்கே...

Out of the night that covers me,
Black as the pit from pole to pole,
I thank whatever gods may be
For my unconquerable soul.

In the fell clutch of circumstance
I have not winced nor cried aloud.
Under the bludgeonings of chance
My head is bloody, but unbowed.

Beyond this place of wrath and tears
Looms but the Horror of the shade,
And yet the menace of the years
Finds and shall find me unafraid.

It matters not how strait the gate,
How charged with punishments the scroll,
I am the master of my fate:
I am the captain of my soul.

Invictus – Indeed....

Rating: 10/10.

Saturday, October 9, 2010

Dress to kill - "CAKE OR DEATH?!"

 

Recently, I stumbled across a great video of a stand-up comedian called Eddie Izzard. Intrigued, I hunted for the whole video of the show and saw it .Well folks, that extra ordinary stand up show is the Dress to kill by Eddie Izzard.

Now, who is a stand-up comedian?

Just imagine a stage, where you are gonna have to go and talk humorously for ,say, some 10 minutes to some hundreds of people. Would not that be difficult?

Well, here a stand-up comedian is one, who goes to that stage and performs a succession of humorous stories and jokes , monologues, humorous one liners etc., for more than an hour. Truth be told, songs, music, magic tricks… anything goes, but remember you have to make them laugh for the whole time.That is the golden rule and a very difficult one at that.

When you talk about an actor and a stand up comedian , there really could be no comparison as the actor has everything borrowed, starting from his dialog to the shoes and clothes he is gonna wear.

But not a comedian. He will only have his wit and intelligence with him. He also has to be spontaneous. Apart from the rehearsed stuff, while in a stage, he also has to do spontaneous comedy based on the comments of the audience.

It is said that it will take a stand-up comedian years to perfect his stand-up performance for about an hour.

Having said this, now let us see the one of the greatest stand-up comedians now.

Eddie Izzard is a British stand-up comedian, who is most famous for his shows like, Dress to Kill,Unrepeatable, Definite Article, Glorious, Circle, Sexie and Stripped.

Now, let us see about this particular show, Dress to kill. But, before doing so, I would like to tell you two things.

He is British, which would help you throughout the show on his stand points.

He is a transvestite.

The video starts with Eddie mocking the San Francisco city, where he is staging. When everybody shows their disapproval by hissing, he suddenly laughs and says,

“And you're a city of snakes, I see.

(Hisses) Everyone goes to a gig with a snake in their bag. No other cities have snakes as much as you. New York, no snakes. Paris, London, no snakes.

San Francisco,full of snakes! We did that at school.So you can call it "the City".

The crowd starts clapping. See, one minute he was being jeered at, but the next minute, due to his wit, he gains claps. That’s what is about being a stand-up comedian is about…

You have to be witty, innovative and you also have to improvise a lot.

Ranging from Stonehenge, Queen Victoria, Hitler, British colonization to Virginity , this video was greatly funny and intelligent. I especially liked the jokes he made on Britain and Hitler. Watch out for his flag joke. It is quite very ingenious. And the reactions he makes are quite funny. But, watch out. He is not the usual kind of comedian who relies on Racist jokes or insults or gross comments. This guy rather believes in his wit to make intelligent and sharp jokes. Truly, he is one of the gifted comedians….

Rating : 5 / 5.

Some of the quotes from the video….

“And the National Rifle Association says that, "Guns don't kill people, people do,” but I think the gun helps, you know? I think it helps. I just think just standing there going, "Bang!" That's not going to kill too many people, is it? You'd have to be really dodgy on the heart to have that…”


“If you're choking in a restaurant you can just say the magic words, "Heimlich manoeuvre," and all will be well. Trouble is, it's difficult to say "Heimlich manoeuvre" when you're choking to death.”

 
“Cake or death?”(Which became one of his famous quotes..)

Go here to watch the complete show.But,be aware.He is not an usual stand-up comedian who believes that sarcasm means passing up racist comments.Certainly not like Russell peters.He is a highly intellectual,demanding,witty comedian.

Note: This video is a bit tough to understand as it involves a lot of things about american and british history, their culture and all that. So, the first time you might not be able to grasp everything he says. But, when you see it the second time or the third, you will realize his wit and timeliness. 

http://www.youtube.com/watch?v=esieMmyLCbo&p=B5D140607AA4918D&playnext=1&index=18

 

Dress to kill – Nah, with his uproarious jokes…