Wednesday, March 24, 2010

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......


வணக்கம் நண்பர்களே.இந்த ப்ளாக் ஆரம்பிச்சதே நல்ல காமிக்ஸ்,புத்தகங்கள்,படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆசையில் தான்.படங்கள் பத்தியும் காமிக்ஸ் பத்தியும் எழுதுன அளவுக்கு நான் புக்ஸ் பத்தி எழுதல......
So,here I am......
இந்த முறை த்ரில்லர் எழுத்தாளர் Stephen King எழுதிய Misery பத்தி பார்க்கலாம்.எனக்கு action,adventure genre நாவல்கள் தான் அதிகம் பிடிக்கும்.த்ரில்லர் டைப் நாவல்கள் அதிகம் படிச்சதில்ல.அதனாலேயே இவர் எழுதுன நாவல்கள நான் படிச்சது இல்ல.

ஒருமுறை இவரோட முதல் புக்கான Carrie படிக்க நேர்ந்தது.கதை கொஞ்சம் வித்தியாசமா இருந்ததால,இவரோட பேமஸ் புக்கான இத படிக்கலாம்னு நெனச்சேன்.அதுசரி,Carrie என்ன கதையா?

சின்ன வயசுல இருந்து எப்பயுமே கிண்டல் அடிக்கப்பட்டு,நண்பர்களே இல்லாம,கூட படிக்குறவங்களால அருவருப்போட வெறுத்து ஒதுக்கப்படற ஒரு பொண்ணு தான் Carrie.ஆனா,எந்தப் பொருளையும் மனசால நெனச்சே நகர்த்தக் கூடிய Telekinetic பவர் அந்தப் பொண்ணுக்கு இருக்கு.
ஸ்கூல்ல மட்டுமில்லாம வீட்டுலயும் பிரச்சனைகள் நிறைஞ்சவ தான் கேரி.அவளோட அம்மா ஒரு religious fanatic.பைபிள் சொல்ற ஒவ்வொரு வரியும் அட்சரம் பிசகாம கடைப்பிடிக்கப்படணும்னு நினைக்குற ஒரு ஆள்.எதையாவது தப்பா பண்ணிட்டா அதுக்காக பொண்ண தனி அறையில வச்சு ஒரு நாள் முழுக்க பூட்டிவைக்குற மாதிரியான ஒரு கேரக்டர்.
இப்படியான அவளுடைய வாழ்கையில ஒருநாள் அவ வாழ்கையில நடக்குற ஒரு சம்பவத்தால எப்படி அவ வெறி ஏறி,அவளோட பவரால அவள கொடும பண்ணுன அந்த ஊரையே அழிக்கணும்னு கெளம்புறா,அதுக்கப்புறம் என்ன ஆகுது அப்டிங்க்றது தான் கதை.
பிளஸ்:
*புது முயற்சி (கதை வெளியிடப்பட்டது 1974 ல).
*Telikinetic பத்தின விசயங்கள நல்லாவே விளக்கி இருப்பது.
*கதையோட பிளாட்.என்னதான் பூ சுத்துற மாதிரி இருந்தாலும்,சின்ன வயசுல நம்மள்ள எத்தன பேர் எத்தன விதமான கிண்டல்களையும்,கேலிகளையும் சந்திச்சு இருப்போம்?அதோட ரிலேட் ஆகி ஒரு வர்ற ஒரு கதைன்னதும் நம்ம அறியாமலே அந்தப் பொண்ணு மேல ஒரு இரக்கம் வந்துடுது.
ஆனா அதே அவ கடைசியல புத்தி பேதலிச்சு,வெறியாட்டம் ஆட்றப்ப ஒரு சங்கடம்மும்,அவளுக்காக வருத்தமும்,அதே நேரத்துல அவ பண்றது தப்புங்கிற எண்ணம்னு ஒரு கம்போசிட் ஆன ரியாக்சன்ஸ் வரும்.யோசிச்சு பாருங்க.நாம ஜாலியா இருக்கணும்கிறதுக்காக எத்தன முறை எத்தன பேர மனசு கஷ்டப்படுத்தி இருப்போம்?அத ஒரு தடவயாச்சும் யோசிக்க வைக்கும் இந்த புக்.
*கதைய ஒரே கோணத்துல சொல்லாம,பலவிதமான கோணங்களில்,பலரோட பார்வைகளில் சொன்னது.
மைனஸ்:
*இது அவரோட முதல் புக்.அதனால,அவ்வளவு விறுவிறுப்பு கெடையாது.வேகமான ப்ளோ இருக்காது.கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் படிக்கணும்.
*கொஞ்சம் vague ஆன நடை.
*அதிகமான gore சீன்ஸ்.இந்த ஒரு ரீசனுக்கு தான் எனக்கு ஸ்டீபன் கிங் பிடிக்கல.த்ரில்லர் அப்டின்னா gore ஆ இருக்கணும்னு ஸ்டீபன் கிங் நெனச்சுகிட்டு இருக்காரு போல.
சரி இப்போ Misery பத்தி........

Paul Sheldon ஒரு பிரபல எழுத்தாளர்.அவர் எழுதுற Misery அப்டிங்கற தொடர் நாவல்கள் பெண்கள் மத்தியில ரொம்ப பேமஸ்.அவரு கதை எழுத ஒரு ஒதுக்குப்புறமான ஊருக்கு போறாரு.ஒருநாள் இவர் ஒரு ஆக்சிடென்ட்ல சிக்கிக்குறாரு.அப்ப இவர காப்பாத்தி,ஒதுக்குப்புறமான தன் வீட்டுக்கே கொண்டு போய் ட்ரீட்மென்ட் கொடுக்குறா Annie அப்டிங்கற ஒரு முன்னாள் நர்ஸ்.சுயநினைவுக்கு வந்த பின்ன தான் தெரியுது இவருக்கு கால்ல பயங்கரமான பிராக்சர் ஆகி இருக்குன்னு.ஆனா விஷயம் இத்தொட முடியல.பால் முக்கியமான சில விஷயங்கள தெரிஞ்சுக்கிராறு...
*அவரோட பிராக்சர் காம்பவுண்ட் பிராக்சர்.
*துணை இல்லாம அவரால பெட்ட விட்டு கீழ கூட எறங்க முடியாது.
*வலியக் குறைக்க ஆன்னி கொடுத்துட்டு இருந்த Novrel அப்டின்ற மாத்திர போதைப் பொருள் நிறைஞ்சது.
*பாலோட தீவிர ரசிகைகல்ல ஆன்னியும் ஒருத்தி.
*ஆன்னிக்கு மிசெரி நாவல் ரொம்ப பிடிக்கும்.முக்கியமா அந்த முக்கிய பாத்திரமான மிசெரிங்கற பொண்ண.
*ஓவர் டோசிங்னால தான் நோவ்றேலுக்கு அடிக்ட் ஆகி இருப்பது.
*ஆன்னிக்கு பிடிச்ச மிசெரி கேரக்டர தான் தன்னுடைய ரீசென்ட் ஆன நாவல்ல கொன்னது,அவளுக்கு தெரியாதது.
*இத எல்லாம் விட முக்கியமா,ஆன்னி ஒரு சாடிஸ்ட்,கொஞ்சம் கொஞ்சமா அறிவை இழந்துகிட்டு இருக்குற சைக்கோ அப்டின்னு.
மிசெரி கேரக்டர் சாகடிக்கப்பட்டு இருக்குன்னு தெரிஞ்சதுமே ஆன்னி தன்னோட சுய ரூபத்த காட்ட ஆரம்பிச்சுடுவா.அவளுக்காக மட்டுமேன்னு அடுத்த மிசெரி நாவல எழுதனும்னு அவன கொடுமைப்படுத்த ஆரம்பிச்சுடுவா. முதல்ல என்ன மாதிரி ஒரு எழுத்தாளன கட்டாயப்படுத்தி எழுத வைக்க முடியாதுன்னு மறுக்குற பால்,பின்ன தன்னோட உயிரைக் காப்பாத்திக்க சம்மதிப்பான்.
ஆனா,பிரச்சனை முடியல,அப்பதான் ஆரம்பிக்குதுன்னு அவனுக்கு பின்னாடி தான் தெரியும்.ஆன்னி கொஞ்சம் கொஞ்சமா தன் அறிவ இழந்துகிட்டு இருக்கா அப்டிங்க்ரத அவளுக்கு அவளே ஏற்படுத்திக்கிற காயத்தின் மூலமா பால் தெரிஞ்சுக்க ஆரம்பிப்பான்.என்னதான் தான் நாவல் எழுதி முடிச்சாலும் தன்னோட உயிருக்கு எந்த உத்திரவாதமும் கிடையாதுன்னு அவனுக்கு புரியும்.இப்ப அவனுக்கு ரெண்டு பிரச்சனை.
ஒண்ணு,அவன் தன்னோட உயிருக்காக போராடணும்.
இத விட முக்கியமா அவன் தானும் கொஞ்சம் கொஞ்சமா பைத்தியம் ஆகாம இருக்கப் போராடணும்.
எப்படியாவது எஸ்கேப் ஆயிடணும்னு அவன் ஒரு தரம் முயற்சி செய்யுறப்ப தான் ஆன்னி வீட்ல போன் கெடயாதுன்னும்,அவ இருக்குற ஏரியால பல மைல்களுக்கு வேற வீடுங்களே கெடயாதுன்னும்,வேணுக்கும்னே தான் ஆன்னி அவன வீட்லயே சிறை பிடிச்சு வச்சு இருக்காங்கறதும் தெரிய வரும்.இதையும் மீறி தப்பிக்கணும்னு அவன் ஆசைபட்றான்,அவசரப்பட்றான்.ஆனா,அது அவ்ளோ சுலபம் இல்ல.ஏன்னா,அவன வழிக்கு கொண்டு வர அவ கிட்ட Novrel இருக்கு,ஊசி இருக்கு,இதுக்கெல்லாம் மேல கோடாலி ஒண்ணும் இருக்கு.......
நண்பர்களே,இந்த நாவல திட மனசு உள்ளவங்க மட்டுமே படிங்க.அவ்வளவு கொடூரம்.இது இதே பேர்ல ஹாலிவுட்ல படமா வந்தது.அது மட்டும் இல்லாம தமிழ்லயும் வந்துருக்கு.அது என்ன படம்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது இல்ல.ஆனா,இந்த புக்கோட கம்பர் பண்ணுனா அது பூனை,இது ரத்த வெறி பிடிச்ச புலி.தீம் என்னமோ psychological thrillerன்னாலும் புக் ரொம்ப gore ஆ தான் இருக்கு.
இந்த நாவல அவர் எழுதுனதுக்கு பின்னாடி ஒரு சின்ன கதை இருக்கு.இதுல பால் அவரு தான்.ஆன்னி,இவர் எழுத்து மேல வெறி பிடிச்சு இவர தொல்லையும்,அட்வைசும் கொடுத்து,இவர் தாங்க எதிர்பார்குற மாதிரி தான் எழுதனும்னு ஆர்டர் பண்ற ரசிகர்கள்.ஒரு கட்டத்துல தன்னோட வெறுப்ப பதிவு பண்ணவே இந்த புக்க எழுதுனார்.அதனாலேயே இது ரொம்ப fierce and raw.எழுத்து நடை அப்டியே அனல் தெறிக்கும்.அந்த பெட்ல கெடக்குற பால் நீங்கதான்னு நீங்க பீல் பண்ணவே ஆரம்பிச்சு,கதை போக போக ஆன்னி மேல வெறியும்,இந்த மாதிரி ஒரு நெலம எனக்கு வந்துரக்கூடாதுன்னும் வேண்டிக்கவே ஆரம்பிச்சுடுவீங்க.அங்க தான் அவரோட வெற்றியே இருக்குது.
என்னால இதோட இம்பாக்ட தமிழ்ல சரியா கொண்டு வர முடியல.இத விட இன்னும் டீப் இம்பாக்ட் வேணும்னு நெனக்குறவங்க இங்கிலீஷ்ல நான் முன்னாடியே எழுதுனத படியுங்க.
Paul sheldon,after getting caught up in an accident finds himself in the crutches of Annie,who is an ex nurse who takes him up to her isolated home and treats him.But that is not all about her.She is his die hard fan,likes very much his best selling Misery novel series and its heroine and also she is a lunatic.
Paul soon finds out that his leg fractures are worse and he is too weak.He also finds out that he is addicted to the painkiller Novrel which Annie has intentionally or unintentionally been feeding him.When Annie finds out that paul has killed up her much adored Misery character,she becomes enraged and all hell breaks loose.
She demands him to write a new novel just for her.At first,he declines.But,when he gets subjected to vivid and unsettling ‘punishments’ he decides better to accept to save himself.
He is not driven by hope but by fear. When he tries to escape once,she amputates one of his feet from his leg to ensure that he will not try to escape again.Paul soon finds out that Annie is on the verge of sanity who is ready to kill herself and him.Only thing stopping her from doing so is the novel.Paul has to fight for his life and for his own sanity.When he finds out that Annie has killed in her past so many times,he realises that she is not just a lunatic,but a psycho on the verge of slipping out .
Paul suffers five months of misery writing and true misery.He is no longer sure of his demise or his escape.He understands that to escape,he has to kill her.But this is not easy as she is very strong and he is too weak.
With just three characters in this novel,the author gives you the chilling creeps.Paul,Annie and terror.You try to cajole yourself that it is just a book.But,it claws and gnaws inside you.You might feel that the book is sick.In rising this feeling,author succeeds.You would like to put down the novel,but you could hardly do so.Your eyes will widen with horror,while your hands will grip the book harder with expectation.
Misery – Like a nail being banged to your head........hard,vulgar and excruciatingly vivid.

Sunday, March 14, 2010

The Classic- காதல் காவியம்.




ஒரு தலைமுறையில் விதைக்கப்பட்ட காதல் மரம் அடுத்த தலைமுறையிலும் பூக்கள் தருவது தான் The Classic.
2003 இல் வெளியான கொரியன் படமான இது, இரண்டு தலைமுறைகளின் காதலை கவித்துவமாகக் கூறுகிறது.வாழ்க்கை நதியில் இரண்டு தலைமுறைகளை இணைக்கும் பாலமாக காதல் உள்ளதை தெரியப்படுத்தும் விதமாக இரண்டு கரைகளை இணைக்கும் பாலத்தை காட்டி ஆரம்பமாகிறது இந்தப்படம்.


எனது முந்தய பதிவு ஒன்றில் சொன்னதைப் போல காதல் சார்ந்த கொரியன்படங்களுக்கு ஒரு பார்முலா உள்ளது.ஒரு cute ஹீரோயின்,ஒரு மிகச் சாதரணமான ஹீரோ,அவர்களுக்குள் நடக்கும் மோதல்,மோதல் கலந்த காதல் தான் அது.ஆனால்,கிளாசிக் அப்படியில்லை.சுடுவெயிலில் நதிக்கரையின் ஓரத்தில் நடந்து செல்லும் போது வந்து வருடிச் செல்லும் மென்காற்றைப் போல,வாழ்க்கையில் சொல்லாமலே நுழைந்து, சொல்லவொண்ணா வேதனைகளையும்,நினைத்து ரசிக்கும் தருணங்களையும் தந்து மனதினுள் ஏக்கத்தையும்,பாசத்தையும் விதைக்கும் காதலைப் பற்றிய கவிதையே The Classic.

Soo Gyung என்ற தன்னுடைய தோழியின் காதலுக்கு உதவும் பொருட்டு அவளுடைய காதலன் Sang Minக்கு, Gyung கிற்கு பதிலாக காதல் கடிதங்களை எழுதி அதை ஈமெயிலில் அனுப்பும் Ji Hae,தனக்கே தெரியாமல் Sang min மேல் தனக்கு ஒரு ஈர்ப்பு வந்து விட்டதை உணர்கிறாள்.ஆனால் இந்த ஒரு தலைக் காதலை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கும் அவள், ஒரு நாள் தன்னுடைய அம்மாவின் காதலைப் பற்றி தன் வீட்டில் இருக்கும் டைரியைப் பார்த்து தெரிந்து கொள்கிறாள்.தன்னுடைய சிறு வயதில் தன் தந்தை இறந்த பிறகு தன் அம்மா தனிமரமாகவே இருந்ததை பற்றி அதுவரை வியந்து கொண்டு இருந்த அவளுக்கு அந்த டைரி அதற்கான காரணத்தை,அவளுடைய அம்மாவின் காதல் கதையின் வாயிலாகச் சொல்லுகிறது.மெல்ல மெல்ல தன்னுடைய அம்மாவின் கதையைப் படிக்கும் போது தன்னுடைய பிரச்சனை தன் அம்மாவின் காதலிலும் வியாபித்து இருந்ததைக் கண்டு ஆச்சர்யம் அடைகிறாள்.

முன் பின் தெரியாத Yoon Tae Soo விற்கும் Oh Joon Ha விற்குமான நட்பு,Tae soo வினுடைய வருங்கால(பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்ட) மனைவியாகவிருக்கும் Sung Joo Heeவிற்கு Joon காதல் கடிதம் எழுதித் தருவதன் மூலம் தொடங்குகிறது.

ஒரு நாள், நண்பர்களின் காதலுக்கு உதவும்பொருட்டு கடிதங்கள் எழுதித் தரும் Joon ஐத் தேடி வரும் Tae, தன்னுடைய பெற்றோர்கள் தனது வருங்கால மனைவியாக,அரசியல்வாதியின் மகளான Sung Joo Hee ஐ தேர்ந்தெடுத்து இருப்பதாகவும்,தங்களுடைய அரசியல் லாபத்திற்காக அவர்கள் செய்த இந்த செயலிலோ,அந்தப் பெண்ணிடமோ தனக்கு எந்த விருப்பமும் இல்லை என்று கூறுகிறான்.தன்னை அந்தப் பெண்ணிற்கு கடிதம் எழுதுமாறு பெற்றோர்கள் வற்புறுத்துவதாகவும் கூறி அலுத்துக் கொள்ளும் Tae,தனக்காக கடிதம் எழுதித் தருமாறு Joonஇடம் கேட்கிறான்.அதற்கு இசைகிறான் Joon.

தன்னுடைய தாத்தாவை காண கிராமத்திற்கு வரும் Sungகிற்கும்,தன்னுடைய உறவினர்களைக் காண வரும் Joonஇற்கும் சந்தர்ப்ப சூழ்நிலையால் காதல் மலர்கிறது.தான் அணிந்திருக்கும் சங்கிலியை கிளம்புவதற்கு முன் அன்புப்பரிசாக கொடுத்து விட்டு செல்கிறாள் Sung. Sung மனதில் இருப்பதை சரியாக புரிந்து கொள்ள முடியாத குழப்பத்தில் இருந்தாலும்,அவளை நினைத்து உருகவும்,நண்பன் Taeவிற்கு குற்ற உணர்வோடும்,வலியுடனும் கடிதம் எழுதிக் கொடுக்கவும் முடிகிறது Joonஇற்கு.

மனதிற்குள் ஆயிரம் ஆசைகளை ஒளித்து வைத்திருந்தாலும்,இரண்டாம் முறை அவளை காணும்போது பேச்சடைத்து நிற்க மட்டுமே முடிகிறது Joonஇற்கு.ஆனாலும் காதல் அவர்களை விடுவதாயில்லை.மூன்றாம் முறை அவர்கள் ஒருவரை ஒருவர் காணும் போது,காதல் கரைகளை உடைத்துப் பொங்குகிறது.இதற்கிடையே Taeவின் மனதிலும் காதல் பூக்கிறது.இதை அறிந்து கொள்ளும் Sung குழப்பமும்,வேதனையும் அடைகிறாள்.நிலைமை மோசமாவதைக் கண்ட Joon,Taeவிடம் உண்மையை சொல்லுகிறான்.
பெருந்தன்மையுடன் தன்னுடைய ஆசையை மனதிற்குள் புதைத்து விட்டு விலகிக் கொள்ளும் Tae,அவர்களுடைய காதலுக்கு உதவும் தூதுவன் ஆகிறான்.Joon எழுதும் கடிதங்களை Sungகிடம் நேரிலேயே கொடுக்கிறான்.இரு மனங்கள் மகிழ,ஒரு மனம் வருந்துகிறது.இது இப்படி இருக்க,இந்த உண்மை Taeவின் அப்பாவிற்கு தெரிய வர,அரசியல் ஆதாயத்திற்காக எப்படியாவது அவன் Sungஇன் மனதை மாற்றி அவனைக் காதலிக்குமாறு பண்ண வேண்டும் என்று கொடுமைப்படுத்துகிறார்.

இரு காதலர்களுக்கும் இடையூறாக இருப்பதாலும்,தன்னுடைய வருத்தத்தை போக்கிக் கொள்ள முடியாததாலும்,Tae தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறான்.இதனைக் கண்டு அவனைக் காப்பாற்றும் Joon மனம் உடைந்து,Sungஇடம் இருந்து விலகும் பொருட்டு திடீர் என்று காணமல் போகிறான்.

அதன் பின்னர்,இந்த சிக்கல் மிகுந்த இந்த இரண்டு காதல்களிலும் யார் யாரோடு இணைந்தார்கள் என்பதை மென்சோகத்தோடு எடுத்துரைக்கிறது classic.இந்தப்படத்தின் கடைசி இருபது நிமிடங்கள் மனதைப் பிசைந்தாலும்,கடைசிக் காட்சியில் ஒரு சிலிர்ப்பு பரவுவதை தடுக்க முடியாது.கதையின் கிளைமாக்ஸ் அருமை.எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.
படத்தில், மகளின் காதல் கதையும்,அம்மாவின் காதல் கதையும் parallel ஆக வருகின்றன.ஆனால்,மகளின் காதலை விட அம்மாவின் காதலுக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டு இருக்குறது.

மெதுவாகவே செல்லும் படத்தின் இயல்பிற்கு ஏற்ப மெல்லிய இசையும்,mild ஆன கேமரா கலரும் படத்துடன் ஒன்றி நம்மையும் ஒன்ற வைக்கிறது.
Ji Hae அந்த டைரியில் இருந்த புகைப்படத்தை வெளியே வைக்கும்போது காமெராவின் போகஸ் கொஞ்சம் கொஞ்சமாக புகைப்படத்தை நோக்கி பயணிப்பதும்,கொஞ்ச நேரத்தில் திரை முழுக்க அந்த கருப்பு வெள்ளை புகைப்படம் வியாபிப்பதும்,அந்த புகைப்படத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வண்ணம் சேர்ந்து அது காலத்தின் பின்னே சென்று,போன தலைமுறைக் காதலைப் பற்றிய கதை ஆரம்பிப்பது கவிதை.

படத்தில் இரட்டை வேடத்தில் அம்மாவாகவும்,பின்னர் மகளாகவும் Son Ye-jin .நிறைவான நடிப்பு.காதலுக்கு ஏங்குவதும்,குழம்புவதும்,மகிழ்வதும்,படம் முழுக்க மென் சோகத்தோடு வருவதும் என்று கதாப்பாத்திரங்களாகவே வாழ்த்து இருக்கிறார்.அதிலும் குறிப்பாக முன் தலைமுறைப் பெண்ணாக அவரது நடிப்பு சிறப்பு.

படத்தில் 3 ஹீரோக்கள் இருந்தாலும் மனதில் நிலைப்பது Yoon Tae Sooவாக நடித்த Lee Ki-woo மற்றும் Oh Joon Haவாக நடித்த Jo Seung-woo தான்.
காதலில் கரைவதும்,ஏங்குவதும்,காதலியைக் கண்டவுடன் மகிழ்ச்சியில் உளறுவதும்,பின் நண்பனின் துயரம் கண்டு துடிப்பதும் என நிறைவாக செய்திருக்கிறார் (See up ).அதிலும் அந்த கடைசி இருபது நிமிடங்களில் கதாப்பாத்திரத்தோடு ஒன்றி அவர் நடத்தும் ராஜாங்கம்,பிரம்மாண்டம்.
காதல் என்றாலே ஏளனம் செய்து திரியும் நான்,சிறந்த காதல் கதையாக நினைத்தது ‘அலைபாயுதே’ படத்தை தான்.அதாவது இந்தப் படத்தைப் பார்க்கும் முன் வரை.இப்பொழுது அதனைப் புறம் தள்ளிவிட்டு,என் மனதில் ஏறி அமர்ந்துள்ளது இந்தப் படம்.It is truly a classic.

மேலும்,நக்கலும் குசும்பும் நிறைந்த என்னையும் கவித்துவமாக எழுத வைத்து விட்டது இந்தப் படம்.ஆனால்,இந்த எழுத்து நடை நன்றாக இருக்கிறதா என்று நீங்கள் தான் நண்பர்களே சொல்ல வேண்டும்.

Classic – பொக்கிஷம்.  (இந்த hint ஐ யார் கண்டு பிடிக்கிறார்கள் பார்க்கலாம். )


Sunday, March 7, 2010

My Little Bride - A Review.




My little bride 2004 இல் வெளிவந்த ஒரு கொரியன் படம்.பொதுவாவே கொரியன் படங்கள்
romantic comedy டைப் தான் நெறைய வரும்.இதுவும் அதே.
பொதுவா கொரியன் ரொமாண்டிக் படங்கள்ல மொக்கையா ஒரு ஹீரோ,படு சூப்பரான
ஒரு ஹீரோயின்,அவங்களுக்கு உள்ள நடக்குற மோதல்,மோதல் கலந்த காதல்
அப்டின்னு ஒரு formula இருக்கு.ஆனா,கதையே கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்
இதுல.


சுருக்கமா சொல்லனும்னா,ஒரு வயசுப்பையனுக்கும் ஒரு 15 வயசுப் பொண்ணுக்கும்
கட்டாயமா கல்யாணம் பண்ணி வச்சா என்ன ஆகும்க்றது தான் கதை.ஆனா இத
விரசமில்லாம humor கலந்து சொல்லி இருக்காங்க.


கதையோட நாயகன் ஒரு playboy.அவனோட இன்ட்ரோவே அவன் ஏர்போர்ட்ல ஒரு
பொண்ண மடக்க ட்ரை பண்ணி அவ ஏற்கனவே கல்யாணம் ஆனவன்னு தெரிய
வந்து,மொக்க வாங்குறதுல தான் ஆரம்பிக்குது.ஒரே சீன்ல நமக்கு ஹீரோ பத்தி
தெரிஞ்சும் போயிடுது.இவனுக்கு இன்ட்ரோ இப்டின்னா ஹீரோயினுக்கு இன்னும்
அழகு.ஹீரோயின் திரும்பி நிக்கிறப்போ வேனுக்கும்னே செல்ல கீழ போட்டுட்டு
போவான் ஹீரோ(எதுக்கா?இன்னும் ரொம்ப வளரணும் தம்பி நீயி).அவ அத எட்டி
உதச்சுட்டு,ஹீரோவ பேரு சொல்லி கூப்பிட்டு ‘நீ இன்னும் திருந்தவே இல்லையா’ன்னு
பரேடு விடுரதுல ஆரம்பிக்கும்.இதுல ஆரம்பிச்சு ரெண்டு பேரும் சண்டை போடுறதும்
கலாட்டா பண்றதும் நிக்கவே நிக்காது.


சரி கதைக்குள்ள போவோம்.ஹீரோயினோட(San Boeun) தாத்தாவுக்கு உடம்பு சீரியசா
இருக்குன்னு அவசரமா ஹீரோ(Sang Min) கொரியா வந்து இறங்குரதுல ஆரம்பிக்கிது
படம். ஹீரோவோட பாமிலியும்,ஹீரோயின்னோட பாமிலியும் ஒண்ணுக்குள்ள
ஒண்ணா,ரெண்டு தலைமுறையா சேந்து வாழுற குடும்பம்.அதனால, ஏர்போர்ட்ல
பிக்-அப் பண்ண ஹீரோயின அனுப்பி இருப்பாங்க.


வீட்டுக்கு போய் தாத்தாவ பாத்தா அவரு பெரிய குண்ட தூக்கி ஹீரோ,ஹீரோயின்
ரெண்டு பேரு தலையிலயும் போடுவாரு.அதாவது,அவரும் அவரு பிரண்டும்(Sang Min
ஓட தாத்தா) ரொம்ப வருசத்துக்கு முன்னாடி தங்களுக்கு பிறக்குற குழந்தைங்களுக்கு
கல்யாணம் பண்ணி வக்குறதா முடிவு பண்ணிகிட்டதாகவும்,ரெண்டுமே ஆம்பளயா
போனதால முடியாம போனதாவும் சொல்லிட்டு,sang and boeun அ கல்யாணம் பண்ணி
பாத்தா தான்,தன்னோட பிரண்டுக்கு தான் கொடுத்த வாக்குறுதி நிறைவேரும்னும்
சொல்லுவாரு.தன்னோட உடல் நிலை மோசமா இருக்குறதுனால உடனே அத
நடத்தனும்னும் சொல்வாரு.


ரெண்டு பேருக்கும் ஷாக் ஆயிடும்.பின்ன,பொறந்ததுல இருந்தே எலியும் பூனையுமா
சண்டை போட்டுக்கிட்டு,கலாட்டா பண்ணிக்கிட்டு இருந்தவங்கள போயிட்டு
கல்யாணம் பண்ணிக்கங்கடான்னா,மெர்சல் ஆக மாட்டாங்களா என்ன.ஹீரோ,எனக்கு
இப்ப, அதுவும் இவளோட கல்யாணம் வேணாம்னுட்டு ஓடிடுவான்.Boeun இந்த சின்ன
வயசுல கல்யாணம் பண்ண மட்டேன்னு சொல்லிடுவா.இவங்க ரெண்டு பேரையும்
வழிக்கு கொண்டு வர அந்த fraud தாத்தா,ஹாஸ்பிடல்ல போய்
படுத்துகிட்டு,மரணப்படுக்கை நாடகம் எல்லாம் போடுவாரு.


கடைசியா ரெண்டு பேரும் ஒத்துக்குவாங்க.ரெண்டு பேருக்கும் கல்யாணமும்
நடந்து,ஹனிமூனுக்கும் அனுப்பிடுவானுங்க(ஒண்ணுமே நடக்கப்படாதுங்கற
கண்டிஷனோட). ஆனா,flightலேயே ஹீரோவுக்கு கடுக்கா கொடுத்துட்டு ஹீரோயின்
நைசா எஸ்கேப் ஆயிடுவா.ஹனிமூன தனியா ஹீரோ ‘கொண்டாடிகிட்டு’
இருக்குறப்போ,வீட்டுக்கு தெரியாம தன்னோட புது boyfriend ஓட சுத்திகிட்டு இருப்பா

Boeun.


கொஞ்ச நாள்ல தான் தெரிய வரும்,ஹீரோவும் ரொம்ப வருசத்துக்கு முந்தி இருந்தே
ஒரு பொண்ணு மேல கண்ணா இருக்கான்ங்க்றது.இதெல்லாம் விட கொடும
என்னன்னா,இவனுங்களுக்கு நடந்த கல்யாணத்த இவனுகளே மதிக்க
மாட்டானுங்க.ஆனா,இவனுங்க ஆத்தா அப்பனுங்க கர்ம சிரத்தையா தனி வீடு பிடுச்சு
கொடுப்பானுங்க(ஹீரோயின் டிகிரி வாங்குற வரைக்கும் சுத்த பத்தமா இருக்கனும்க்ர
கண்டிஷனோட).இந்த கூத்துக்கு நடுவுல ஹீரோயின் ஸ்கூலுக்கும் போகனும்க்றது
தான் செட்அப்பே.(யோவ்!டபுள் மீனிங் எல்லாம் இல்லைய்யா.இது வரைக்குமே சந்தி
சிரிச்சு கெடக்கு).


இந்த கூத்து எல்லாம் வீட்டுக்கு தெரிஞ்சதா,யாரு யாரு கூட சேந்தாங்க அப்டிங்க்றது
தான் மிச்ச கதை.


முத பாதியில ரெண்டு பேரும் சண்டை போட்டுகுறது,கல்யாணத்த பத்தி பெஸ்ட்
பிரிண்ட்ஸ் கிட்ட புலம்புரதுன்னு காமெடியா போன படம்,ரெண்டாவது பாதியில
இவங்க ரெண்டு பேரும் தனி வீட்ல அடிக்குற ஜாலி கூத்துனு (டீசண்டா) குஜாலா
போகும்.


பின் குறிப்பு: மக்கா,இது மேட்டர் படம்னு நெனச்சு ஏமாந்துராதிங்க.ஒரு பிட்டு கூட
கெடயாது.


ஹீரோவா Kim Rae Won.ஆளு செம ஸ்மார்ட்.அசால்டான playboy கேரக்டர்ல
அசால்டாவே பின்னி இருக்காரு.பொண்ணுங்க பின்னாடி அலையறதும்
,வலியுறதும்,சலம்புறதும்,beounகிட்ட லொள்ளு பண்றதும்,உருகறதும் மனுஷன்
கெத்து.


ஹீரோயினான Moon Geun Young .பயங்கர cute.நொடிக்கு ஒரு expression காட்டி நம்மள
அசரடிக்குரதுல இருந்து அந்த குழைந்தைத்தனமான நடிப்புலயும்,அழகுலயும் நம்மள
கிறங்க அடிக்குற வரைக்கும்னு இந்த பொண்ணு பாக்குறப்போ எல்லாம் நம்மகிட்ட
உள்ள எதையோ எழுப்புதுங்க.(யோவ்!நான் ஆசைய சொன்னேன்).


ஹீரோ ஹீரோயினுக்கு நடுவுல இருக்குற கலக்கல்,கலாய்த்தல் chemistry
அதகளம்.ஜாலியான கவித மாதிரியான படத்துக்கு,emotional கவித மாதிரி பிட்டிங்
கிளைமாக்ஸ்.அப்புறம்,நம்ம தமிழ் சினிமா டைரக்டர்களுக்கு....


யோவ்!அவனவன் லவ்வ எப்டி எல்லாம் சொல்றான்.நீங்க இன்னும் குண்டு
சட்டிக்குள்ளேயே குதுரய ஓட்டிகிட்டு.... கொஞ்சம் திருந்துங்க அய்யா....

My little Bride – So very cute.
video video

Wednesday, March 3, 2010

மனதில் உறுதி வேண்டும்......




மக்கா....தலைப்ப பாத்துட்டு இது ஏதோ சுய முன்னேற்ற கட்டுரைன்னு தப்பா நெனச்சுட வேண்டாம். அந்த அளவுக்கு எனக்கு மொக்க போடுற தெறமையோ,பீலா விடற புத்திசாலித்தனமோ கெடயாது.இது தமிழ்ல வந்த LUCKY LUKE ஓட The Curing of the Daltons அப்டிங்ர ஒரு காமிக்ஸ் பத்தின பதிவு. இந்த கதை Lion Comicsல 14 வது ஆண்டு மலரா வந்தது.


(லக்கி பத்தி தெரியாத பயபுள்ளைக இங்க போங்க.
Written by: Goscinny .
Illustrated by: Morris .
ஒரு கிறுக்கு professor,
4 பக்கா கிரிமினலுங்க,
1 ஹீரோ (அட,நம்ம லக்கி தாங்க).
இவங்க எல்லாம் சேந்தா என்ன ஆகும்ங்கறது தான் கதை.


Otto von Himbeergeist அப்டின்னு ஒரு professor.இவர் “குற்றவாளிகளின் மனநிலை” பத்தி ஒரு ஆராய்ச்சி செய்து ஒரு அரும் பெரும் உண்மைய கண்டுபிடிக்கிறார்.
அதாவது “எல்லா குற்றவாளிகளுமே அடிப்படையில் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள்.அவர்கள் இன்றைக்கு இப்படி இருக்க காரணம் சின்ன வயசுல நடந்த ஏதோ ஒரு சம்பவம் தான். “ அப்டிங்கரது தான் அந்த மாபெரும் உண்மை.Infact, ஒவ்வொரு மனிதனோட தற்போதைய நிலைமைக்கு சின்ன வயசுல நடந்த ஏதோ ஒரு விஷயம் தான் உந்துகோல் அப்டிங்கறது அவரோட வாதம். இது எல்லாம் போதாதுன்னு, இது எல்லாத்தையுமே சிகிச்சை மூலமா குணப்படுத்திடலாம்னும் அவர் சொல்றாரு.


ஆனா,இவரு சொல்றதுக்கு பயங்கர எதிர்ப்பு கெளம்புது(பின்ன,எல்லா குற்றவாளியும் மனநோயாளின்னு சொன்னா...). இவரோட ஆராய்ச்சிய நிரூபிக்க இவர் உலகத்தின் மோசமான திருடர்கள் நிறைந்த அமெரிக்காவிற்கு, (!!! யப்பா,இதுல என்னோட உள்குத்து எதுவும் கெடயாதுப்பா.) அதிலும் குறிப்பாக கொள்ளையர்கள் நிறைந்த Texas மாநிலத்துக்கு இவர் போறாரு. இவருக்கு உதவியா நம்ம லக்கிய நியமிக்கிராங்க.


இவங்க ரெண்டு பேருமா சேந்து Otto வோட ‘லட்சிய குற்றவாளிய’ தேடி உள்ளூர் ஜெயிலுக்கு போறாங்க. அங்க டால்டன் ப்ரதர்ஸ சந்திக்குறாங்க. பாத்த உடனே நம்ம ஜோ டால்டன ஒட்டோவுக்கு ரொம்ப பிடிச்சுப் போய்,நான் தேடுன லட்சிய குற்றவாளி இவன் தான்னு சந்தோசப்படுராறு(தேவுடா!!!). ஜெயில் சூழ்நிலைல இவனுங்களுக்கு சிகிச்சை கொடுத்தா சரிப்பட்டு வராதுன்னுட்டு (கொடும!) ஊருக்கு வெளிய ஒரு வீடு பிடிச்சு, துணைக்கு லக்கியையும் கூட்டிக்கிட்டு போய்டுறாரு ஓட்டோ.


ஏதோ இவரு புண்ணியத்துல நம்ம டால்டன் பசங்க வரலாற்றுலயே முதல் முறையா வெடிகுண்டு இன்றி, துப்பாக்கி இன்றி (கத்தி இன்றி,ரத்தம் இன்றி மாதிரி படிக்கவும்) ஜெயில விட்டு வெளிய வர்றாங்க. ஆனா,இவங்கள எப்பயும் தன் கண்காணிப்புலேயே வச்சு இருக்காரு லக்கி.


ஆனா, ‘ஒண்ட வந்த பிடாரிய ஊர் பிடாரி ஓட்டுச்சாம்’ன்ற மாதிரி அந்த டாக்டரோடயே கம்பி நீட்டிட்ரானுங்க நம்ம டால்டனுங்க. இவங்கள தேடி லக்கி தன்னோட குதிர ஜாலி ஜம்பர் மற்றும் அந்த கிறுக்கு நாய் Rin Tin Can னோட போறாரு லக்கி.கடைசியில தேடி தேடி இவனுங்கள கண்டு பிடிச்சுடுவாறு லக்கி.ஆனா அங்க போய் பாத்தா தான் தெரியும்,ஒட்டோவையே தங்களோட வழிக்கு மாத்தி வச்சுருக்கானுங்க டல்டனுங்கன்னு. அப்புறம் என்ன, லக்கிய பிடிச்சு வச்சுக்குவானுங்க. இவனுங்க புது முறையுல கொள்ளை அடிக்கிற அழக காட்டிட்டு லக்கிய போட்டு தள்ளறதா முடிவு பண்ணிட்டு அன்னைக்கு நைட்டே லக்கிய கூட்டிட்டு போவானுங்க.அங்க போய் பாத்தா, ஓட்டோ பேசிப் பேசியே பேங்க் மேனேஜர்களுக்கு எல்லாம் பணத்து மேல வெறுப்பு வர்ற மாதிரி பண்ணிடுவான்.(இந்த மாதிரி ஒரு ஆளு தமிழ்நாட்டுல இருந்தா நல்லா தான் இருக்கும்.ஹூம்....)


அதுக்கு பின்ன, மேனேஜரே போய் லாக்கர்ல இருக்குற பணத்த எல்லாம் சத்தமில்லாம எடுத்துக் கொடுத்துடுவான்(பணத்து மேல அவ்ள வெறுப்பு உண்டாக்குரனுங்கலாம்).இவனுங்கள எப்டி லக்கி கம்பி எண்ண வக்குராருங்க்றது தான் மிச்ச கதை.


கதையுல பல கட்டங்கள் உங்கள விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும்.அதுல கொஞ்சம் இங்க பாப்போம்.


கத ஆரம்பிச்ச எடத்துல இருந்து ஓட்டோ, தான் சந்திக்குற ஒவ்வொரு மனுஷனையும் அவனோட குழந்தைப் பருவத்தோட பாதிப்புல இருந்து பேசி பேசியே ‘சரி’ பண்ணுறார். இதுல,ஜெயில் வார்டன்,ரயில் கொள்ளையர்கள்,மொடாக்குடிகாரன்ன்னு ஒரு பெரிய லிஸ்டே வரும். ஆனா, இவர பேச விட்டு தங்களோட வழிக்கு டால்டனுங்க ‘சரி’ பண்ணுவானுங்க பாருங்க.செம கூத்தா இருக்கும்.


ஆரம்பத்துல ஒட்டோவுக்கும்,professor ஜாக்க்கும் நடக்குற அந்த arguement, பேசி பேசியே ஜெயில் வார்டனுக்கு எல்லோரையும் உள்ள போடறதுல வெறுப்ப உண்டாக்குரது, டால்டனுங்கள திருத்திட்டேன் பேர்வழிங்ர பேர்ல அவங்கள நம்பி துப்பாக்கிய கொடுத்துட்டு,பின்ன தன்னைய வச்சே அவனுங்க எஸ்கேப் ஆகுறத பாத்துட்டு ஓட்டோ முழிக்கிற முழி,லக்கிய யார் கொல்றதுங்ரதுக்காக டால்ட்டனுங்க, தங்களுக்குள்ள சீட்டு விளையாண்டு ஜெயிக்கிறவன் தான் கொல்லனும்னு முடிவு பண்ணி சீட்டு விளையாடுற எடம், பேசிப் பேசியே பேங்க் மேனேஜர் கிட்ட இருந்தே பூரா பணத்தையும் புடுங்குற இடம்னு கதை பூரா ஒரே காமெடி கலாட்டா தான் போங்க.


கதைக்கு மிகப்பெரிய பலமே dialogs தான்.அதுலயும் தமிழ்ல விஜயன் சார் translationல பின்னி எடுத்து இருப்பாரு.அதுல கொஞ்சம் samples....


ஆரம்ப விவாதத்தில்:
Prof Jack: எல்லா குற்றவளிங்களும் மன நோயாளிங்கன்னு சொல்ற.சுத்த குடாக்கு தனமா இல்ல இருக்கு.
ஓட்டோ:உங்க மொழியின் நுணுக்கங்கள் எனக்கு இன்னும் புரியல.கொஞ்சம் புரியற மாதிரி செப்பரிங்களா சாமி?
ஜாக்:திருடன் திருடன் தான்.கேப்மாரி கேப்மாரி தான்.இவனுங்கள குணப்படுத்த ஒரே மருந்து தான் உண்டு.அது துப்பாக்கி தோட்டா.


லக்கி ரயில்வே ஸ்டேஷன் இல் ஒட்டோவுக்கு காத்து இருக்கும் போது:
லக்கி:நியூயார்க் ட்ரைன் லேட்டா ?
ஸ்டேஷன் மாஸ்டர்:சேச்சே,3-07 க்கு வர வேண்டிய train வழிப்பறி முடிஞ்சு டான்னு 4-35 க்கு வந்துடும்.


ஜெயிலில் கைதிகளின் அணிவகுப்பின் போது:
வார்டன்: இவன் காட்டான் கென்னடி.கவர்னரோட மாமியார கழுத்தறுத்து கொன்னுட்டான்.முதல்ல தூக்கு தண்டன கொடுத்தாங்க.பின்ன,கவர்னரோட தலையீட்டால ஆறு மாசமா மாற்றப்பட்டது.


டால்ட்டன்கள் தப்பிக்கும் போது:
ஓட்டோ:இதுல துப்பாக்கி இருக்கு.வெளியில குதிரைங்க இருக்கு.டால்டன்களுக்கு தப்பிக்க எல்லா வசதியும் கொடுக்கப்போறேன்.ஆனா,அவங்க அத யூஸ் பண்ண மாட்டாங்க.ஏன்னா,அவங்கள நான் குணப்படுதிட்டேன்.
லக்கி: வேணாம் டாக்டர்.திட்டம் சொதப்புச்சின்னா?
ஓட்டோ:அதெல்லாம் சொதப்பாது.
லக்கி:டாக்டர்,இது சுத்த பைத்தியகாரதனமா இருக்கு.சொன்ன கேளுங்க.
ஓட்டோ:இத பாருப்பா.யார் பைத்தியம்,யார் பைத்தியம் இல்லைங்கறத தீர்மானிக்க வேண்டியவன் நான்.புரிஞ்சதா?
துப்பாக்கிய வச்சு வித்த காட்டுறவனுங்க எல்லாம் பேச வந்துட்டானுங்க.
(கதவை சாத்தி விட்டு உள்ளே செல்கிறார்.)
லக்கி: #@***
(கொஞ்ச நேரம் கழித்து கதவு திறக்கப்படுகிறது.ஓட்டோ வெளியே வருகிறார்.)
லக்கி:டாக்டர் என்னாச்சு?
ஓட்டோ:திட்டம் சொதப்பிடிச்சு.
ஜோ டால்டன்:அதுவும் எப்படியாம்?டேய்,குதிரைகாரா.துப்பாக்கிய கீழ போடு இல்ல டாக்டர பரலோகத்துக்கு அனுப்பிடுவேன்.


முதல் பேங்க் கொள்ளையடிக்கப்பட்ட பின்பு:
ஷேரிப்: வாப்பா லக்கி.இங்க வந்து பாரேன்.
ஒரு கீறல் இல்ல.
ஒரு சத்தம் இல்ல.
லக்கி:பாத்தா டால்டனுங்க பண்ண மாதிரி தெரியலையே.
ஷெரிப்:ச்சே ச்சே.அவனுங்க உள்ளூர் பசங்கப்பா.எப்பயும் வெடிகுண்டும் ,துப்பாக்கியும் தான் யூஸ் பண்ணுவானுங்க.இது யாரோ வெளியூர்காரனோட கைவரிசை.


லக்கிய பிடித்த பிறகு:
ஓட்டோ:லக்கிய என்ன பன்றதுன்னு இப்போ முடிவு பண்ணலாம்.
ஜோ:அதை பற்றி அவனை தீர்துக்கட்டிய பிறகு பேசிக்கொள்ளலாம் டாக்டர்.
ஓட்டோ:முட்டாப்பசங்களா.உங்கள வெளிய விட்டது நான்.நான் சொல்றது தான் இங்க சட்டம்.
#1:ஓ.கே டாக்டர்.டென்ஷன் ஆகாதிங்க.
#2:ஆத்திரபடாதிங்க டாக்டர்.
#3:டேக் இட் ஈஸி டாக்டர்.
லக்கி: பேசாம நீங்க ஒரு நல்ல டாக்டரைப் போய் பாரத்தால் என்ன டாக்டர்?
ஓட்டோ:கஸ்மாலம்.உன்ன இப்பவே தீர்த்துக்கட்ட போறேன்.
ஜோ:டாக்டர்,இதெல்லாம் கள்ளாட்டை.வேணும்ணா ரம்மி ஒரு கை போட்டு பாத்து இவன யாரு தீர்த்துகட்டுரதுன்னு முடிவு பண்ணிக்கலாம்.


Friends,இதுல ஏதாவது மொக்கையா தோன்றி இருந்தாலோ,போர் அடிச்சு இருந்தாலோ அந்த தப்பு என்னுதா தான் இருக்கும்.ஏன்னா,இந்த அருமையான கதைல எத எழுதுறது எத விட்ரதுன்னு தெரியாம நான் முழித்ததனால இருக்கலாம்.Adios amigos.



போறதுக்கு முந்தி கமெண்ட் போட்டுட்டு,இது நல்லா இருக்குதுன்னோ ,இது நெறைய பேர போய் சேரணும்னும்னோ நீங்க நெனச்சா வோட்டு போட்டுட்டு போங்க. வரவுக்கு நன்றி.